டெல்லி: சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடுகிறது .மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கும் சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராகுல்காந்தி ராஜினாமா செய்த வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.