சண்டிகர்: மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அரியானா சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழு 2 நாள் பயணமாக நேற்று சண்டிகர் சென்றனர்.
தேர்தல் கமிஷனர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் கமிஷன் குழுவை அரியானா மாநில தலைமை தேர்தல் அதிகாரி பங்கஜ் அகர்வால் வரவேற்றார். அரியானா சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இக்குழுவினர் ஆய்வு செய்வார்கள்.