டெல்லி: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள
234 தொகுதிகளுக்கு வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல், இடமாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசிதழில் வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் ஆட்சியர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர் நிலையில் அதிகாரிகளை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல்: அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு
0