திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் சீதள் தம்பி. இவர் பிரபல நடிகை மஞ்சு வாரியர் தயாரித்துள்ள பூட்டேஜ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கும்போது நடிகை சீதள் தம்பிக்கு காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எர்ணாகுளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பல மாத சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், நேற்று பூட்டேஜ் படம் வெளியானது.
இந்நிலையில் ரூ.5.75 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகையும், படத்தின் தயாரிப்பாளருமான மஞ்சு வாரியருக்கு சீதள் தம்பி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், காலில் ஏற்பட்ட காயத்தால் வாழ்நாள் முழுவதும் சில பிரச்னைகள் இருக்கலாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளதால் என் திரையுலக வாழ்வே கேள்விக்குறியாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.