லெக்ட்ரிக்ஸ் நிறுவனம் எல்எக்ஸ்எஸ் ஜி3.0 மற்றும் ஜி 2.0 என்ற 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. அறிமுகச் சலுகையுடன், ஜி2.0 ஸ்கூட்டரின் ஷோரூம் விலை சுமார் ரூ.1.03 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜி3.0 ஸ்கூட்டரின் விலை பின்னர் அறிவிக்கப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் அடுத்த மாதம் 16ம் தேதி துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர்களில் 93 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 36 அம்சங்கள் பாதுகாப்பு தொடர்பானவை. 24 ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன. இதர 14 அம்சங்கள் வாகன ஓட்டியின் சொகுசான பயண அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நேவிகேஷன், கீலெஸ் என்ட்ரி, திருட்டு தடுப்பு, அவசர கால எஸ்ஓஎஸ், ஸ்கூட்டர் எந்த இடத்தில் உள்ளது என்பதை அறியும் வசதி, புளூடூத் இணைப்பு, ஹெல்மெட் அணியாவிட்டால் எச்சரிக்கும் அமைப்பு, மொபைல் ஆப்ஸ் மூலம் செயல்படுத்தப்படும் சில வசதிகள், வாகனத்தில் பழுது ஏற்பட்டால் தெரிவிக்கும் வசதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த ஸ்கூட்டர்கள் 2.3 கிலோவாட் அவர் மற்றும் 3.0 கிலோவாட் அவர் பேட்டரி தேர்வுகளில் கிடைக்கின்றன. முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கி.மீ தூரம் வரை செல்லலாம் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது.