சென்னை: அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கரின் 68வது நினைவு நாளை முன்னிட்டு ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்தார். இதில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் உள்பட பலர் பங்கேற்றனர். பாஜ சார்பில் மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்பட பலர் மரியாதை செலுத்தினர். தைலாபுரம் தோட்டம் பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதஸங 0மரியாதை செலுத்தினார். துணைத் தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் நிரவாகிகள் கலந்து கொண்டனர்.
கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் படத்திற்கு பொதுச் செயலாளர் பிரேமலதா மரியாதை செலுத்தினார். துணை செயலாளர் பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கட்சி தலைமை அலுவலகத்தில் அம்பேத்கரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். சமத்துவ கழக தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


