புதுடெல்லி: தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில் பிரிக்ஸ் அமைப்பின் 3 நாள் மாநாடு கடந்த 22ம் தேதி தொடங்கியது. மாநாட்டின் கடைசி நாளான நேற்று தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, பிரதமர் மோடி,சீன அதிபர்ஜின்பிங், பிரேசில் அதிபர் லூயிஸ் இன்னாசியோ லுலாடா சில்வா ஆகியோர் பேட்டியளிக்கையில்,‘‘ பிரிக்ஸ் அமைப்பில் அர்ஜென்டினா,எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 6 நாடுகள் விரைவில் சேர்க்கப்படும்’’ என்றனர்.