புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் வழக்கு ஒன்றில் தொடர்புடையோரின் மூத்த வழக்கறிஞர்கள் இருவருக்கு குஜராத் காவல்துறை சமீபத்தில் சம்மன் அனுப்பியிருந்தது. இது பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்க்கு வழக்கறிஞர்கள் கடிதம் எழுதிய நிலையில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து மேற்கண்ட வழக்கானத் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில். ஒரு வழக்கில் மனுதாரர்களுக்கு ஆலோசனை அல்லது வழக்கில் உதவி செய்ததற்காக காவல்துறை வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்புவது நீதித்துறையை குறை மதிப்பிற்கு உட்படுத்தும். நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நேரடியான அச்சுறுத்தல் ஆகும். மேலும் இந்த விவகாரத்தில் குஜராத் காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.