துரைப்பாக்கம்: பொன்னேரி பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவர், வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று மாலை அம்பத்தூரில் இருந்து மாநகர பேருந்தில் (தடம் எண்.62) வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே பேருந்தில் பயணித்த புழல், அந்தோணியார் கோயில் 3வது தெருவை சேர்ந்த வழக்கறிஞர் குருமூர்த்தி (58), இந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால், அவர் குருமூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்த பேருந்து ஓட்டுநர் புழல் காவல் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி, வழக்கறிஞர் குருமூர்த்தியை போலீசிடம் ஒப்படைத்தார்.


