Sunday, March 3, 2024
Home » தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்க்கும் வகையில் சட்ட திருத்தம் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் நியமனம் செல்லாது: ஐகோர்ட் உத்தரவு

தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்க்கும் வகையில் சட்ட திருத்தம் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் நியமனம் செல்லாது: ஐகோர்ட் உத்தரவு

by Ranjith

சென்னை: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக எஸ்.மோகன் கடந்த 17ம் தேதி நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து வி.பழனியப்பா மற்றும் மவுரோகா பிரகாஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதி இல்லாமல் துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதி அடங்கிய புதிய தேடுதல் குழுவை அமைக்க வேண்டும். தற்போதுள்ள தேடுதல் குழுவை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரினர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் பழனியப்பா சார்பில் வழக்கறிஞர் எம்.ரவி ஆஜராகி, விதிமுறைகளுக்கு முரணாக நியமிக்கப்பட்டுள்ள துணை வேந்தர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகள் 2018ன்படி துணை வேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழு அமைக்கப்படவில்லை. எனவே, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை. துணை வேந்தராக எஸ்.மோகனை நியமனம் செய்த புதுச்சேரி அரசின் உத்தரவு நிலைக்கத்தக்கதல்ல.

அந்த நியமனம் செல்லாது. அதே நேரத்தில் எஸ்.மோகன் தகுதியானவர் அல்ல என்று கூறப்படவில்லை. 2024 ஜூன் 30க்குள் புதிய துணை வேந்தரை நியமிக்க வேண்டும். அதுவரை எஸ்.மோகன் துணை வேந்தராக செயல்படலாம். தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய விதிகள் 2018ன் பிரதிநிதி பங்கேற்கும் வகையில் சட்ட திருத்தத்தை புதுச்சேரி அரசு கொண்டு வர வேண்டும். தற்போதுள்ள துணை வேந்தர் தகுதியுள்ளவராக இருந்தால் அவரையும் பரிசீலிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi