Wednesday, April 24, 2024
Home » மாவட்டத்தின் பல இடங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா: அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

மாவட்டத்தின் பல இடங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா: அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

by Ranjith

பூந்தமல்லி: மாவட்டத்தின் பல இடங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுகவினர் கேக் வெட்டியும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினர். பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில், நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஒவ்வொரு வார்டு கிளையிலும் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி மரியாதை செய்தனர்.

பொதுமக்களுக்கு உணவு, இலவச வேட்டி சேலை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட பொருளாளர் ஜாவித் அகமது, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சார்லஸ், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சல்மான்ஜாவித் உள்ளிட்டோர்கலந்துகொண்டனர். அதேபோல், பாரிவாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் வெங்கட் மற்றும் அதிமுகவினர், இருளர்கள் குடியிருப்புகளுக்கு கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.

இதேபோல், காட்டுப்பாக்கம், கண்ணபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய குழு உறுப்பினர் ஒன்றிய செயலாளர் கவுதமன் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வின்போது, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரிவாக்கம் வைத்தியநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா சரவணன், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திருவள்ளூர்: திருவள்ளூர் எம்ஜிஆர் சிலை அருகே வக்கீல்கள் செந்தில்குமார், சுந்தரேசன், ஒன்றிய கவுன்சிலர் நரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் தலைமை தாங்கி உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் வெஜிடபிள் பிரியாணி வழங்கினார்.

இதில் முன்னாள் எம்எல்ஏ சக்குபாய் தேவராஜ், குமாரச்சேரி ஏகவல்லி லோகநாதன், நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், வளையாபதி, ராமதாஸ், சின்னசாமி, ரவிக்குமார், வெங்கடேசன், சீனு, அண்ணாதுரை, ராகவன், ஆடலரசன், விஜி, குப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் ஒன்றிய அதிமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் புட்லூரில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சக்கரைப் பொங்கல் வழங்கினார்.

இதில் ஊராட்சி தலைவர் லோகம்மாள் கண்ணதாசன், நிர்வாகிகள் டிக்ரூஸ், இளங்கோவன், தேவேந்திரன், சக்தி ஜெயபால், மாரி, பிரவீன், அந்தோணி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அமமுக சார்பில் திருவள்ளூரில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ வுமான டி.ஏ.ஏழுமலை தலைமை தாங்கி மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். டி.ஏ.புகழேந்தி முன்னிலை வகித்தார்.

இதில் நிர்வாகிகள் தேவராஜ், தண்ணீர்குளம் முன்னாள் வார்டு உறுப்பினர் ஹென்றி, ரஞ்சித் குமார், இமயவர்மன், சௌந்தர்ராஜன், செல்லப்பன், ரமேஷ், மாஞ்சி, குட்டி தாஸ், குமார், பிரேம், ரவி, ராஜா, மோகன் வினோத், மகாலிங்கம் உமாநாத், நீதிநேசன், பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பெரியபாளையம் அருகே வடமதுரை அரசு தொடக்கப்பள்ளி அருகே வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி இனிப்பு வழங்கி 500 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ் கலந்து கொண்டு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதேபோல் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பின்னர் ஏழை, எளிய மக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் கோதண்டன், வித்யா லட்சுமி இணைச் செயலாளர் வித்யாலட்சுமி வேதகிரி, ஒன்றிய அவைத் தலைவர் விஜயன், சுந்தர்ராஜன், பார்த்திபன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டை: பேரூர் செயலாளர் ஷேக்தாவுத் தலைமையில் நிர்வாகிகள் அருணாச்சலம், பிரஸ் மணி, சுப்பிரமணி, சிவக்குமார் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் கலந்துகொண்டு பஸ் நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், ஜெயலலிதாவின் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் ரெட்டி தெருவில் தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி மற்றும் புடவைகள் வழங்கினார். இதேபோல் தாராட்சி கிராமத்தில் ஊராட்சி தலைவர் சிவகாமி செஞ்சுவேல் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் லதா அசோக் முன்னிலையில், தாராட்சி, பால்ரெட்டி கண்டிகை, ஆலங்காடு, தொம்பரம்பேடு ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள், நூறுநாள் வேலை செய்பவர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர்.

You may also like

Leave a Comment

five × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi