சென்னை: குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் அக். 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை, செல்போன் பறிப்பு, திருட்டு தொடர்பான 3 வழக்குகளில் தொடர்புடைய, 3 குற்றவாளிகள் மற்றும் 1 இளஞ்சிறார் என 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடந்த 7 நாட்களில் வாகன திருட்டு தொடர்பான 3 வழக்குகளில் 2 குற்றவாளிகள் மற்றும் 3 இளஞ்சிறார்கள் என 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.