சென்னை: சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 11.08.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 453 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 133 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 183 குற்றவாளிகள், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 29 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 05 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 07 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 17 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் படுத்திய 05 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 04 குற்றவாளிகள் என மொத்தம் 836 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண், இ.கா.ப, அவர்கள் உத்தரவின்பேரில் கடந்த 05.08.2024 முதல் 11.08.2024 வரையிலான 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளிகள் 1.நரசிம்மன், வ/22, த/பெ.மணி, முகப்பேர் மேற்கு, சென்னை என்பவர் கடந்த 12.07.2024 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக V-5 திருமங்கலம் காவல் நிலையத்திலும், 2.குணசேகரன், வ/46, த/பெ.பெருமாள், இளங்கோ நகர், கொட்டிவாக்கம், சென்னை மற்றும் 3.சதிஷ்ராஜ், வ/31, த/பெ.துரைஅரசன், வெங்கடேசபுரம், கொட்டிவாக்கம், சென்னை ஆகிய இருவரும் கடந்த 11.06.2024 அன்று கௌதம் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக J-6 திருவான்மியூர் காவல் நிலையத்திலும், 4.ஜோசப், வ/24, த/பெ.எட்வின், அன்னை சத்யா நகர் 2வது தெரு, அண்ணா நகர், சென்னை என்பவர் 20.06.2024 அன்று அடிதடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, K-4 அண்ணா நகர் காவல் நிலையத்திலும், 5.சரவணன், வ/24, த/பெ.வேலு, பாடி குப்பம், திருமங்கலம், சென்னை என்பவர் கடந்த 12.07.2024 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக V-5 திருமங்கலம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், 6.மணிகண்டன், வ/22, த/பெ.பரசுராமன், ஊத்துக்கோட்டை தாலுகா, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் 7.ரஞ்சித்குமார், வ/26, த/பெ.ஜனகராஜ், ஊத்துக்கோட்டை தாலுகா, திருவள்ளூர் மாவட்டம் ஆகிய இருவரும் கடந்த 08.07.2024 அன்று கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக, அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவிலும், 8.சங்கர், வ/38, த/பெ.ரவி, பட்டாபிராம், சென்னை என்பவர் கடந்த 19.06.2024 அன்று நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த குற்றத்திற்காக K-8 அரும்பாக்கம் காவல் நிலையத்திலும்.
9.அகிலன் (எ) வெள்ளையங்கிரி, வ/27, த/பெ.சக்திவேல், சேத்துப்பட்டு, சென்னை என்பவர் கடந்த 17.07.2024 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக G-7 சேத்துப்பட்டு காவல் நிலையத்திலும், 10.மணிகண்டன் (எ) மணி, வ/28, த/பெ.ஸ்டாலின், திருவல்லிக்கேணி, சென்னை என்பவர் கடந்த 14.07.2024 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக D-2 அண்ணா சாலை காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், 11.ராம்கி (எ) ராம்குமார், வ/32, த/பெ.எட்வர்டு, குருசாமி நகர் 5வது தெரு, புளியந்தோப்பு, சென்னை, 12.மோகன்ராஜ் (எ) பால் மோகன், வ/21, த/பெ.ரவிகுமார், காவாங்கரை, புழல், 13.விஜய், வ/29, த/பெ.அண்ணாதுரை, திருவள்ளுவர் தெரு, புழல், ஆகிய மூவரும் வழிப்பறி செய்த குற்றத்திற்காக M-3 புழல் காவல் நிலையத்திலும், 14.பாஸ்கர், வ/34, த/பெ.சாமிநாதன், திருப்பூர் குமரன் தெரு, அரும்பாக்கம் மற்றும் 15.சுதாகர், வ/36, த/பெ.முனியன், ராணி அண்ணா நகர், அரும்பாக்கம் ஆகிய இருவரும் 19.06.2024 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக K-8 அரும்பாக்கம் காவல் நிலையத்திலும், 16.மணிகண்டன் (எ) அப்பு (எ) ஆன்ட்ரூஸ், வ/34, த/பெ.ராமு, அயனாவரம் என்பவர் 18.07.2024 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக K-3 அமைந்தகரை காவல் நிலையத்திலும், 17.அப்புராஜ், வ/35, த/பெ.நாகராஜ், பல்லவன் சாலை, சென்னை என்பவர் சிவா என்பவரை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக D-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலும், 18.சந்திரசேகர், வ/29, த/பெ.பெருமாள், அயனாவரம் என்பவர் 05.07.2024 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக K-6 டி.பி.சத்திரம் காவல் நிலையத்திலும், 19.சதிஷ், வ/38, த/பெ.முனுசாமி, மங்களபுரம், ஓட்டேரி, சென்னை என்பவர் 20.06.2024 அன்று 12 கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக P-2 ஓட்டேரி காவல் நிலையத்திலும், 20.ஜெ.சூர்யா, வ/28, த/பெ.ஜெய்சங்கர், அத்திப்பட்டு புது நகர், திருவள்ளூர் மாவட்டம் என்பவர் சங்கிலி பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டதற்காக H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவிலும், 21.என்.சூர்யா, வ/24, த/பெ.நாகராஜன், அம்பேத்கர் நகர், ஆதம்பாக்கம் என்பவர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக J-3 கிண்டி காவல் நிலையத்திலும், 22.குமரன், வ/35, த/பெ.பாண்டியன், பாரதி நகர், கீழ்கட்டளை, சென்னை மற்றும் 23.பப்லு (எ) சண்முகம், வ/37, த/பெ.முனுசாமி, காந்தி நகர், கீழ்கட்டளை ஆகிய இருவரும் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டதற்காக S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் மேற்படி குற்றவாளிகள் நரசிம்மன், குணசேகரன், சதிஷ்ராஜ், ஜோசப், சரவணன் ஆகிய 5 நபர்களை கடந்த 05.08.2024 அன்றும், மணிகண்டன், ரஞ்சித்குமார், சங்கர், அகிலன் (எ) வெள்ளையங்கிரி, மணிகண்டன் (எ) மணி ஆகிய 5 நபர்களை கடந்த 06.08.2024 அன்றும், ராம்கி (எ) ராம்குமார், மோகன்ராஜ் (எ) பால் மோகன், விஜய், பாஸ்கர், சுதாகர், மணிகண்டன் (எ) அப்பு (எ) ஆன்ட்ரூஸ், அப்புராஜ், சந்திரசேகர், சதிஷ், ஜெ.சூர்யா, என்.சூர்யா, குமரன், பப்லு (எ) சண்முகம் ஆகிய 13 நபர்களை 09.08.2024 அன்றும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 23 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.