Monday, June 23, 2025
Home செய்திகள் கடைசி லீக் போட்டியில் இன்று டாப் 2 கனவில் பெங்களூரு ஆப்பு வைக்குமா லக்னோ?

கடைசி லீக் போட்டியில் இன்று டாப் 2 கனவில் பெங்களூரு ஆப்பு வைக்குமா லக்னோ?

by Arun Kumar

* கடந்த மார்ச் 22ம் தேதி கொல்கத்தாவில் துவங்கிய ஐபிஎல் லீக் போட்டிகள், லக்னோவில் இன்று நடக்கும் 70வது, கடைசி போட்டியுடன் முடிவடைகின்றன.
* இதில் பிளே ஆப் வாய்ப்பை இழந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பிளே ஆப் சுற்றில் நுழைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
* இவ்விரு அணிகளும் இதுவரை 5 ஆட்டங்களில் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் பெங்களூரு 3, லக்னோ 2 ஆட்டங்களில் வென்றுள்ளன.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக லக்னோ 213, பெங்களூரு 212 ரன் விளாசியுள்ளன.
* குறைந்தபட்சமாக பெங்களூர் 153, லக்னோ 108 ரன் சேர்த்துள்ளன.
* இந்த 2 அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக மோதிய தலா 5 ஆட்டங்களில் லக்னோ 1-4 என்ற கணக்கிலும், பெங்களூரு 3-1 (ஒரு ஆட்டம் ரத்து) என்ற கணக்கிலும் வெற்றி-தோல்விகளை பதிவு செய்துள்ளன.
* நடப்புத் தொடரில் இரு அணிகளும் தலா 13 ஆட்டங்களில் விளையாடி இருக்கின்றன. இப்போட்டிகளில் லக்னோ 6-7 என்ற கணக்கிலும், பெங்களூர் 8-4 என்ற கணக்கிலும் வெற்றி-தோல்விகளை பெற்றுள்ளன.
* இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் வென்றால் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் ஒன்றை பிடிக்கும். அதனால் குவாலிபயர் சுற்றையும் உறுதி செய்யும்.
* அதே நேரத்தில் லக்னோ வென்றால் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறும். மேலும், பெங்களூரு எலிமினேட்டர் சுற்றுக்கு தள்ளப்படும்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi