கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நகரின் மையப்பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிக்கரையில் குதிரை சவாரி, சைக்கிள் ஓட்டியும் மகிழ்கின்றனர். தற்போது நகரில் கோடை சீசன் களைகட்டி வருவதால் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் இரவு நேரங்களில் நட்சத்திர ஏரியில் லேசர் லைட் ஷோ அமைக்கும் பணி நடந்தது. இந்நிலையில் இன்று முதல் 10 நாட்களுக்கு ஏரியில் லேசர் ஷோ நடத்தப்பட உள்ளது.
கொடைக்கானல் ஏரியில் இன்று முதல் ‘லேசர் ஷோ’
0