சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு வந்து 3 வீடுகள் பாதிக்கப்பட்டன. இது மிகவும் வேதனைக்குரியது.தமிழக அரசு இயற்கைப் பேரிடர் காலங்களில் எதிர்பாராத விதமாக அதிகனமழை, மண்சரிவு ஆகியவற்றால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை முன்கூட்டியே தெரிந்து அதற்கேற்ப உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநிலத்தில் இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் தொடர் கண்காணிப்பும், பாதுகாப்பு பணிகளும் அவசியம் தேவை. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.