சென்னை: நடிகை கவுதமியின் நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகை கவுதமி நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.25 கோடி மதிப்பிலான தனது நிலத்தை மேலாளராக பணியாற்றிய அழகப்பன் மோசடி செய்து விற்றதாகக் கூறி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கவுதமி புகார் அளித்திருந்தார். அந்த புகார் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அழகப்பன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குற்றப் பத்திரிகை நகல் பெற நடிகை கவுதமி நேற்று காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.