காஞ்சிபுரம்: நில மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை கவுதமி விசாரணைக்காக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் உள்ள தனது நிலத்தை விற்று தருமாறு அழகப்பனிடம் கவுதமி கேட்டுள்ளார். அழகப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கவுதமி சொத்துகளை அபகரித்துக் கொண்டு மோசடி செய்துள்ளார். அழகப்பன் தன் நிலத்தை அபகரித்து ஏமாற்றியதாக கூறி நடிகை கவுதமி காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கில் குற்றவாளியான அழகப்பன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நில மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை கவுதமி விசாரணைக்காக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்
118