லேண்ட் ரோவர் நிறுவனம், ரேஞ்ச் ரோவர் வெலார் என்ற எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.94.3 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 247 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதிகபட்சமாக மணிக்கு 217 கி.மீ வேகம் வரை செல்லும். 100 கி.மீ வேகத்தை 7.5 நொடிகளில் எட்டும். இதுபோல் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் 201 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மணிக்கு 210 கி.மீ வேகம் வரை செல்லும். 8.3 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும்.
இந்தக் காரில் பிக்சல் எல்இடி ஹெட்லைட் மற்றும் சிக்னேச்சர் டிஆர்எல்கள், 3டி சரவுண்ட் கேமரா, எலக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷன், பனோரமிக் சன்ரூப், பவர் டெயில் கேட், 11.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 20 வகைகளில் மசாஜ் செய்யும் வசதியுடன் கூடிய முன்புற சீட்கள், கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.