சென்னை: ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி காவல் அளிக்கப்பட்டுள்ளது. 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் 2 நாட்கள் விசாரிக்க கரூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை தன் மனைவி, மகளை மிரட்டி பத்திரப்பதிவு செய்துகொண்டதாக பிரகாஷ் என்பவர் புகார் அளித்திருந்தார்.