சென்னை: பூமிதான வாரிய தலைவர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் சென்னையில் நேற்று பூமிதான வாரிய கூட்டம் நடைெபற்றது. திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 1,755 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்டு வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பயன்பாட்டிற்காக 35.01 ஏக்கர் விஸ்தீரண பூமிதான நிலங்களில் வீட்டுமனை விநியோக பத்திரம் வழங்க வேண்டும்.
பூமிதான சட்டப்பிரிவின்படி 141 பயனாளிகளுக்கு வீட்டுமனைக்காக 6.36 ஏக்கர் பூமிதான நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் துறை செயலாளர் பத்மா, நிலச்சீர்திருத்த ஆணையர் ஹரிஹரன், நிலச்சீர்திருத்த இயக்குநர் மதுசூதன் ரெட்டி மற்றும்அரசு உயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.