பெங்களூர்: லேண்டரில் இருந்து ரோவர் இறங்குவதற்கு முன் சூரியனை நோக்கி ரோவரின் சோலார் மின் தகடு திரும்பியுள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது. சாய்வு தளத்தில் இருந்து ரோவர் உருண்டு வரும்போது ரோவரின் சோலார் மின்தகடுகள் திரும்பியுள்ளன. ரோவர் இயங்குவதற்கு தேவையான மின்சார சக்தியைப் பெற சோலார் மின்தகடு சூரியனை நோக்கி திரும்பியது. சாய்வு தளம் மூலம் லேண்டரில் இருந்து ரோவர் கலன் எளிமையாக நிலவில் இறங்கியதாக இஸ்ரோ அறிவித்தது. சந்திரயான் -3 திட்டத்தில் மொத்தம் 26 வரிசைப்படுத்துதல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.