சென்னை: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். விளிம்புநிலை மக்களை அதிகாரத்தின் மையத்தில் இருத்திய இந்திய அரசியலின் முன்னோடி தலைவர்களில் ஒருவர் லாலு பிரசாத்.
மண்டல் ஆணைய பரிந்துரைகளை உறுதியாக நடைமுறைப்படுத்தியும், மதவாத சக்திகளுக்கு எதிரான வலுவான அரணாக இருந்தும் சமூகநீதிக் கருத்தாடலில் தேசிய அளவில் புதுப்பாதை வகுத்தவர் அவர். அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.