மாதவரம்: ஓட்டேரி பென்சினர்ஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தாக் உசேன் (27), இவர் அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் பீரோவில் இருந்த ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை காணவில்லை என நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் பீரோவில் வைத்திருந்த நகைகள் அப்படியே உள்ளன. ஆனால், பணத்தை மட்டும் காணவில்லை என்றும் அடிக்கடி எங்களது வீட்டிற்கு வந்து செல்லும் தனது சித்தி மகன் சையது இர்பான் மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.