பொன்னை: பொன்னை அருகே சின்னகீசகுப்பம் ஏரியில் விவசாயி மீன் பிடிக்க வலையில் 20 கிலோ எடை கொண்ட கெண்டை மீன் சிக்கியது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். இவர் நேற்று சின்னகீசகுப்பம் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் விரித்த வலையில் சுமார் 20 கிலோ எடை கொண்ட கெண்டை மீன் பிடிபட்டது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் மீனை பார்த்து சென்றனர்.