Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அடுத்த கோட்டமருதூர் பெரிய ஏரியில் நேற்று மாலை மீன்பிடிக்க அதே பகுதியை சேர்ந்த தர்மா என்பவர் சுருக்கு வலை வீசி உள்ளார். அவர் வலையை இழுத்த போது சிறுவர்களின் சடலம் வந்துள்ளது. விசாரணையில், இறந்த சிறுவர்கள் அரகண்டநல்லூர் அடுத்த மணம்பூண்டி பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ஜீவிதன்(10), தர்ஷன்(8), ஹரிஹரன் (11) என்பதும், நேற்று காலை 11 மணியளவில் பெரிய ஏரிக்கு சென்று குளித்தபோது ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.