நன்றி குங்குமம் தோழி
வழிகாட்டும் Apps...
நம் ஊரில், நம் தெருவில், ஏன் வீட்டருகில் நிகழும் முக்கிய நிகழ்வுகள் பற்றி நமக்குத் தெரிவதில்லை. அதை தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்காக அமைக்கப்பட்டிருப்பது
தான் All Events-Discover Events ஆப். இந்த ஆப் மூலம் உங்கள் அருகாமையில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு கூட்டங்கள், ஆரோக்கியம் சார்ந்த கூட்டமைப்புகள், ஷாப்பிங் நிகழ்வுகள், சலுகை விலை ஷோரூம்கள் என அனைத்து நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களையும் இந்த செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் நீங்க எந்த நிகழ்வுக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்று திட்டமிடலாம். நிகழ்வுகள் மட்டுமில்லாமல் புதிய நண்பர்கள் ஒன்றிணைந்து செல்லும் பயணங்கள் குறித்த தகவல்களையும் இந்தச் செயலி அளிக்கிறது. மேலும், வரவிருக்கும் நிகழ்வுகளுக்காக டிக்கெட் என அனைத்துக்கும் ஓரிடமாக இந்தச் செயலி திகழ்கிறது.
நிகழ்ச்சிகளை தேடுவதற்கும், புதிய அனுபவங்களை அறிந்துகொள்ள உதவும் விதத்தில் இந்தச் செயலி செயல்படுகிறது. இசை நிகழ்ச்சிகள், திரைப்படம், நாடகம், ஸ்டாண்டப் காமெடி, வர்க்ஷாப்கள், உணவுத் திருவிழாக்கள் என பல்வேறு நிகழ்வுகள் குறித்த செய்தியினை ஒரே இடத்தில் கண்டறியலாம்.உங்கள் இருப்பிடம் மற்றும் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வுகளை தேடுவதுடன், மேப் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களையும் எளிதாகப் பார்க்கலாம். பிடித்த நிகழ்ச்சிகள் குறித்து அதில் பதிவு செய்து வைத்துக்கொள்ளவும், வர இருக்கும் புதிய நிகழ்ச்சிகள் குறித்து அறிவிப்புகளும் இதில் பெற முடியும்.
சில நிகழ்வுகளுக்கு டிக்கெட் பெற வேண்டும் என்பதால், அதனையும் இதில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், நண்பர்களுடன் நிகழ்வினை பகிர்ந்து அனைவரும் ஒன்றுகூடி செல்லும் வசதியும் உள்ளது.இந்த ஆப்பினை உங்கள் செல்போனில் டவுன்லோட் செய்யும் போது அதற்குரிய தனியுரிமைக் கொள்கையினை பார்த்து பயன்படுத்துவது நல்லது. உலகம் முழுவதும் பல நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒரே தளத்தில் அறிந்துகொள்ள முடிவதால், “இந்த வார இறுதியில் என்ன செய்யலாம்?” என்ற கேள்விக்கு புதிய அனுபவங்களை தேடித்தரும் டிஜிட்டல் துணையாக இது விளங்குகிறது.நிகழ்ச்சிகளை தேடி, முன்பதிவு செய்து, அந்த நிகழ்வினை ரசிக்கக் கூடிய அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த ஒரே செயலி தருகிறது.
தொகுப்பு: மகி


