Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பூச்செடிகள் பூத்துக் குலுங்க டிப்ஸ்!

நன்றி குங்குமம் தோழி

நம் வீட்டுத் தோட்டத்தில் ஆசை ஆசையாய் பூச்செடிகளை வளர்ப்போம். ஆனால், அது சரியாக பூக்கவில்லை என்றால் மனசுக்கு கவலையாக இருக்கும். பூச்செடிகள் அழகாக பூத்துக் குலுங்க சில டிப்ஸ்...

* உங்கள் வீட்டில் இருக்கும் மண்ணை பரிசோதனை செய்யுங்கள். அந்த மண்ணில் என்னென்ன உயிர் சத்துக்கள் குறைவாக இருக்கிறது என்று முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அதற்கேற்றவாறு உரம் தயார் செய்து பூமிக்கு கொடுக்கலாம்.

*ரசாயன உரங்களை நம்புவதை விட இயற்கை உரங்களை நம்புவதே நமக்கு சிறந்த வழியாகும்.

இயற்கையாக பூச்செடியை பூத்துக் குலுங்க வைக்கும் இயற்கை உரம் தயாரிக்கும் முறை:

வாழைப்பழத் தோல்- 4, முட்டை ஓடு - 5, எப்சோம் உப்பு - 1 டீஸ்பூன், தண்ணீர் - 5 லிட்டர்.

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 4 வாழைப்பழத் தோல்களையும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி காய வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 5 முட்டை ஓடுகளையும் நிழலில் காய வைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எப்சோம் உப்பினை சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் வாழைப்பழத்தோல் பொடி மற்றும் 1 டீஸ்பூன் முட்டை ஓடு பொடி இரண்டினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள 5 லிட்டர் தண்ணீருடன் நாம் கலந்து வைத்துள்ள எப்சோம் உப்பு, வாழைப்பழத்தோல் பொடி மற்றும் முட்டை ஓடு பொடி கலவையை சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள்.பின்னர் இதனை எடுத்து உங்களின் பூச்செடிகளின் வேர்களில் ஊற்றுங்கள். இதனை வாரத்திற்கு இருமுறை என்று தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டிலுள்ள பூச்செடிகளில் கொத்துக் கொத்தாக பூக்கள் பூப்பதை நீங்களே காணலாம்.

கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.