Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

உணவின் வெப்பத்தை பாதுகாக்கும் தெர்மல் பைகள்!

நன்றி குங்குமம் தோழி

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் உணவு விநியோகம் ஒரு முக்கியமான சேவையாக மாறியுள்ளது. வீட்டில் இருந்தபடியே பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை ஆர்டர் செய்து, அவை சூடாகவே வந்து சேர்வது நமக்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், அந்த உணவின் வெப்பத்தை பாதுகாக்கும் ஒரு சிறிய முக்கியமான கண்டுபிடிப்பு அதன் பின்னால் உள்ளது. அமெரிக்க பெண்ணான இங்கிரிட் கோசர் என்பவர் இந்த கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார்.

இங்கிரிட் கோசர், சிறு வயதிலிருந்தே புதுமையான யோசனைகளில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். Northern Illinois Universityயில் பத்திரிகைத் துறையில் கல்வி கற்ற இவர் பொறியியல் நிறுவனத்தில் பணியாற்றினார். வாழ்க்கை இயல்பாகச் சென்று கொண்டிருந்த போதும், ஒரு சாதாரண பிரச்னை அவரை உலகளவில் பேசப்படும் கண்டுபிடிப்பாளராக மாற்றியது. 1980களில் அமெரிக்காவில் வீடு தேடி உணவு கொண்டு செல்லும் சேவைகள் வேகமாக வளர்ந்தன. குறிப்பாக Domino’s Pizza போன்ற நிறுவனங்கள் பீட்சா விநியோகத்தில் பெரும் வளர்ச்சியை கண்டன. ஆனால், ஒரு முக்கியமான சிக்கல் இருந்தது. கடையிலிருந்து வாடிக்கையாளரின் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் பீட்சா குளிர்ந்து விடும். இதனால் அதன் சுவையும் தரமும் பாதிக்கப்பட்டது.

இந்தப் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இங்கிரிட் கோசருக்குத் தோன்றியது. ஒரு கைவினைப் பொருள் கண்காட்சியில் வெப்பத்தை பாதுகாக்கும் சிறிய பையை பார்த்தபோது,

இதே மாதிரியான பையை பீட்சா கொண்டு செல்ல பயன்படுத்தலாம் என்கிற யோசனையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.பல மாதங்கள் ஆராய்ச்சி செய்தபின், உணவின் வெப்பத்தை நீண்ட நேரம் தக்க வைத்திருக்கக்கூடிய ஒரு சிறப்பு தெர்மல் பையை அவர் உருவாக்கினார்.

இந்தப் பை பல அடுக்குகளால் ஆனது. வெளிப்புறத்தில் வலுவான துணி, நடுவில் வெப்பத்தை பாதுகாக்கும் இன்சுலேஷன் பொருள், உள்ளே பாதுகாப்பான துணி ஆகியவை சேர்ந்து அமைந்திருந்தது. மேலும், பையின் உள்ளே உருவாகும் நீராவி வெளியேறும்படி வடிவமைக்கப்பட்டதால், உணவு குளிராமல் இருப்பதோடு அதன் தரமும் காப்பாற்றப்பட்டது.

1983ம் ஆண்டு அவர் ‘Thermal Bags by Ingrid’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த பைகள் விரைவில் உணவு விநியோகத் துறையில் பிரபலமானது. குறிப்பாக பீட்சா விநியோக நிறுவனங்கள் இந்தப் பைகளை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கின. இதனால் உணவு விநியோகத் துறையில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டது.இங்கிரிட் கோசரின் கண்டுபிடிப்பு பின்னர் பல துறைகளில் பயன்பட்டது. மருத்துவப் பொருட்கள், ஆய்வக மாதிரிகள் மற்றும் உணவு போக்குவரத்து போன்ற பல இடங்களில் இந்த வெப்பப் பாதுகாப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஒரு சாதாரண பிரச்னையை கவனித்து, அதற்கான தீர்வை கண்டுபிடித்து, இன்று உலகம் முழுவதும் உணவு விநியோகத்தில் தெர்மல் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.

தொகுப்பு: ஆர்.ஆர்