Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

தி டீச்சர் ஆப்!

நன்றி குங்குமம் தோழி

கற்றுக்கொள்வதும் கற்பிப்பதும் இனி ஒரே தளத்தில்...

ஆசிரியரின் முக்கிய கருவிகள் கரும்பலகை, சாக்பீஸ், பாடப்புத்தகம், குறிப்பேடுகள். இன்று அவற்றுடன் ஸ்மார்ட்ேபார்ட் மற்றும் செல்போனும் இணைந்துவிட்டது. வகுப்பறைக்கான பாடத்திட்டம் தயாரிப்பது முதல், மாணவர்களின் புரிதலுக்கு ஏற்ற செயல்பாடுகளை வடிவமைப்பது என அனைத்தையும் தற்போது ஆசிரியர்கள் டிஜிட்டல் முறையில் தயாரிக்க துவங்கிவிட்டனர். இதனை மேலும் மேம்படுத்த உதவுகிறது ‘TheTeacherApp.’

ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் பள்ளித் தலைவர்கள் மற்றும் கல்வித் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள உதவும் டிஜிட்டல் பயிற்சி தளமாக செயல்படுகிறது. 2024 நவம்பரில் தொடங்கப்பட்ட இந்தத் தளம், தற்போது Android, iOS மற்றும் இணையதளம் அனைத்திலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆசிரியர்கள் தங்களது வசதியான நேரத்தில் பாடங்களை படிக்கலாம். குறும்படங்கள், பாட்காஸ்ட், இணைய கருத்தரங்கு, வினாடி வினா, கருத்துக்கணிப்பு உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும் ஈடுபடலாம்.

இந்த செயலியில் ஆசிரியர்களுக்குத் தேவையான பலவகையான பயிற்சிகள், பாடங்கள் குறிப்பாக வகுப்பறைக் கற்பித்தல் உத்திகள், பள்ளி மற்றும் வகுப்பறையில் பயன்படுத்தக்கூடிய கற்பித்தல் வளங்கள் இடம்பெற்றுள்ளன. சில பயிற்சிகளுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. ஒரு குழந்தையின் கல்விப் பயணத்தில் வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணித அறிவு வலுவாக அமைக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு FLN - Foundational Literacy and Numeracy தொடர்பான உள்ளடக்கங்களுக்கும் இந்த செயலியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் சொல்லப்படும் விஷயம் வகுப்பறையில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பது ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால் என்பதால், கோட்பாடுகளை மட்டும் இல்லாமல், வகுப்பறையில் பயன்படுத்தக்கூடிய செயல்பாடுகள், கற்பித்தல் பொருட்கள், கேள்வித் தொகுப்புகள் போன்றவற்றையும் வழங்குகிறது. Teaching Learning Material உருவாக்குவது குறித்த யோசனைகளும் குறும்

படங்களாக இடம்பெற்றுள்ளன. இந்த செயலியின் முக்கிய அம்சம் செயற்கை நுண்ணறிவு வசதிகள். 45-க்கும் மேற்பட்ட AI சார்ந்த கற்பித்தல் கருவிகள் இணைக்கப்பட்டு, ஆசிரியர்களின்

அன்றாடப் பணிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரே வகுப்பறையில் அனைத்து மாணவர்களும் ஒரே வேகத்தில் புரிந்துகொள்வதில்லை. ஒருவருக்கு பாடங்களை விளக்கினால் போதும். சிலருக்கு படங்கள் தேவைப்படலாம். மற்றவர்கள் செயல்பாட்டின் மூலம் புரிதல் ஏற்படலாம். இதுபோன்ற மாறுபட்ட கற்றல் தேவைகளை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதில் AI உதவக்கூடும்.

ஆசிரியர்கள் கற்றுக்கொள்வது மட்டுமின்றி, பிற ஆசிரியர்களின் அனுபவங்கள், யோசனைகள் மற்றும் செயல்பாடுகளையும் அறிந்துகொள்ளவும் ஒரு டிஜிட்டல் சமூகத் தளமாக உருவாக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

இந்த செயலி புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனுபவமுள்ள ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வித்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக தினசரி வகுப்பறைக்கான புதிய யோசனைகள் தேடுபவர்கள், தங்கள் கற்பிக்கும் திறனை புதுப்பிக்க விரும்புபவர்கள், தொழில்நுட்பத்தை கற்பித்தலில் இணைக்க விரும்புபவர்கள் மற்றும் தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டில் ஈடுபட விரும்புபவர்களுக்கு இது ஒரு கூடுதல் ஆதாரமாக இருக்க முடியும்.

இந்த செயலி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த சொல்லித்தரும் செயலியாக இல்லாமல், தொடர்ந்து கற்றுக்கொள்ள உதவும் டிஜிட்டல் துணையாகவும் இருக்கிறது.

கரும்பலகையில் எழுதும் ஆசிரியரின் கையில் இன்று ஸ்மார்ட்போன் வந்தாலும் மாணவருக்கு புரியும் விதத்தில் கற்பிக்கும் ஆசிரியர்தான் வகுப்பறையின் உண்மையான ஆசிரியர்.

தொகுப்பு: மகி