Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

பவளமல்லி பூ பற்றி தெரியுமா?

நன்றி குங்குமம் தோழி

பவளமல்லி தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் பவளமல்லி மரமும் ஒன்று. பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும் நறுமணம் மிகுந்ததுமான அபூர்வமான மலராகும். இது சவுகந்தியா என்ற ஆபரணத்தை போன்ற தோற்றம் கொண்டது. பொதுவாக மண்ணில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை பூஜைக்கு பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், இதற்கு பவளமல்லி விதிவிலக்கு. இது இரவில் பூத்து அதிகாலையில் உதிர்வதால் அப்படி உதிர்ந்த பவளமல்லிப் பூக்களை சேகரித்து தொடுத்து இறைவனுக்கு பயன்படுத்துவார்கள்.

பவளமல்லி மரம் மூன்று இலை தொகுப்புகளை கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் இருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது. பூக்கள் எட்டு இதழ்களுடன் வெண்மையாகவும், காம்பு பவள (சிவப்பு) நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாகவும் நறுமணத்துடனும் இருக்கும். பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால், சூரியன் இளவரசியை ஏற்கவில்லை.

இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள். இளவரசி சாம்பலில் இருந்துதான் பாரிஜாதம் என்ற செடி உருவானது. சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது. இதனால்தான் இதனை ‘வருந்தும் மரம்’ என்றும் அழைப்பார்கள்.

பவளமல்லி மரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. பவளமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத் தன்மை உடையது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து. கால் மூட்டு வலி, ரத்தப் போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணி.பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக்கூடியது.பவளமல்லி மரத்தின் வேரை மென்று தின்றால் பல் ஈறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும்.

விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும்.பவளமல்லி இலைச் சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது.பவளமல்லி விதையை பொடி செய்து அதை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை மறைந்து முடி வளரும்.வீட்டில் வளரக்கூடிய இந்த பவளமல்லி மரத்தில் பட்டு வீசும் காற்று ஆரோக்கியமானது. நமது உடல் நலத்தை பாதுகாக்கக் கூடியது.

தொகுப்பு:  ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.