சமையல் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துவது பணத்தை சேமிக்க உதவுவதோடு மட்டுமில்லாமல் பாதுகாப்பான சமையலுக்கும் உதவுகிறது.
1.அடுப்பை மிதமான தீயில் வைத்து சமைப்பதால், உணவின் ஊட்டச்சத்து அழியாமல் பாதுகாக்கப்படும்.
2.அடுப்பில் ஈரமான பாத்திரங்களை வைக்காமல், உலர்ந்த பாத்திரங்களை மட்டுமே அடுப்பில் வைக்கவும்.
3. பர்னருக்கு ஏற்ற பாத்திரமே சரியானது. பெரிய பர்னரில் சிறிய பாத்திரத்தை வைப்பது எரிவாயு செலவை அதிகரிக்கும். அடுப்பின் பர்னர் நீலநிற சுடருடன் எரிய வேண்டும். மஞ்சள் அல்லது சிவப்பு
நிறத்தில் எரிந்தால் பர்னரில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம்.
4. சமைக்க வேண்டிய பொருட்களை தயார் நிலையில் வைத்த பிறகே சமைக்க வேண்டும். அரிசி, பருப்பு, தானியங்களை முன் கூட்டியே ஊறவைப்பதால், சமைக்கும் நேரம் குறைந்து எரிவாயுவும் மிச்சமாகும்.
5.பருப்பு அல்லது காய்கறிகள் வேகவைக்க தேவையான அளவு தண்ணீர் மட்டும் பயன்படுத்தவும்.
6.பாத்திரத்தின் அடிப்பகுதி பர்னரை விட சிறியதாக இருக்கக் கூடாது. நெருப்பு பாத்திரத்தின் பக்கவாட்டில் வெளியேறினால் வெப்பம் வீணாகிறது என்று அர்த்தம்.
7. ஃப்ரிட்ஜில் இருந்து உணவை நேரடியாக அடுப்பில் வைக்கக் கூடாது. உணவை வெளியில் வைத்து அறை வெப்ப நிலைக்கு வந்த பிறகு சூடுபடுத்த வேண்டும்.
8.சமைக்கும் போது பாத்திரங்களை மூடிவைத்து சமைப்பதால், உணவு விரைவாக சமைக்க உதவும். எரிவாயு பயன்பாடும் குறையும்.
- ச.லெட்சுமி, தென்காசி.


