வாசகர் பகுதி - தலையணை
நன்றி குங்குமம் தோழி
தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். சிலர் தலைக்கே இரண்டு தலையணை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் காலுக்கு ஒரு தலையணை, பக்கத்தில் கட்டிப்பிடித்து படுக்க தலையணை என வித விதமாக தூங்குவதற்கு தலையணை வைத்திருப்பார்கள். இரவு நேரத்தில் நம்மோடு உறவாடும் தலையணையை பராமரிப்பது பற்றி தெரிந்து ெகாள்ளலாம்.
*எப்போதும் அடுத்தவர் பயன்படுத்திய தலையணையை உபயோகிக்கக் கூடாது. இதனால் பேன், பொடுகு பரவும் ஆபத்தினை தவிர்க்கலாம்.
*தலையணை உறையை மாதம் ஒரு முறையாவது மாற்ற வேண்டும். ஏற்கனவே பயன்படுத்திய தலையணை உறையினை நன்கு துவைத்து வெயிலில் காயவைக்கலாம். அல்லது வெந்நீரிலும் துவைக்கலாம்.
*நல்ல வெயில் அடிக்கும் பொழுது தலையணையை காய வைத்து உபயோகிக்கவும்.
*சாயம் போகாத நல்ல தலையணை உறையை பயன்படுத்துவது நல்லது.
*தலையணை மிகவும் கனமானதாகவோ அல்லது மிகவும் மிருதுவானதாக இருத்தல் கூடாது.
*குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அதற்கு ரிட்டையர்மென்ட் கொடுத்தல் நல்லது.
*கழுத்து, தலை, தோள்பட்டை பிரச்னை ஏற்பட வழியிருப்பதால் தலையணை தேர்வினை மிகவும் கவனமாக கையாளவும்.
*குப்புறப்படுத்து தூங்குபவர்கள் தட்டையான தலையணை உபயோகிக்கவும்.
*காலுக்கு, கைக்கு தலையணை வைத்து உறங்குபவர்கள் நல்ல கனமானதாக பார்த்து வாங்கவும்.
*அதே சமயம் தலையணை பயன்படுத்தாமல் தூங்க பழகிக் கொள்ள வேண்டும். காரணம், தலையணையை பயன்படுத்துவதால், சிலருக்கு கழுத்து அல்லது எலும்பு சம்பந்தமான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
*சிலருக்கு மருத்துவர்கள் தலையணை வைத்து தூங்க பரிந்துரைத்து இருப்பார்கள். அவர்கள் மட்டும் தலையணை வைத்து தூங்கலாம்.
*தலையணை இல்லாத தூக்கம் என்பதை நாம் மனதில் கொள்வது அவசியம்.
தொகுப்பு: சுந்தரி காந்தி, சென்னை.