Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

போஸ்டிங் ஜீரோ: ஆன்லைன் ஆளுமை அழுத்தத்திலிருந்து விடுதலை!

நன்றி குங்குமம் தோழி

சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் தினமும் புகைப்படங்கள், ஸ்டோரி, ரீல்ஸ் பகிர்வதே பலரின் வழக்கமாக இருந்தது. சில நாட்கள் போஸ்ட் செய்யவில்லை என்றாலே வாழ்க்கையே நகர்வதில்லை என்ற மனநிலை கூட பலருக்கு இருந்து வந்தது. ஆனால், இன்று அதற்கு நேர்மாறாக ‘Posting Zero’ எனும் ஒரு புதிய போக்கு உருவாகிஉள்ளது.

‘Posting Zero’ என்பது சமூக வலைத் தளக் கணக்கு இருந்தாலும், அதிலுள்ள பதிவுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் அல்லது அவர்களின் போஸ்ட்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருக்கும். ‘லைக்’குகள், ‘கமென்ட்’கள், ‘வியூஸ்’ போன்றவற்றின் எண்ணிக்கைகள் ஒருவரின் மதிப்பை நிர்ணயிக்கத் தொடங்கியபோதே, சமூக வலைத்தளங்கள் மகிழ்ச்சியை விட மன அழுத்தத்தையே அதிகம் கொடுப்பதாக அமைகிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் விதம் மாறியுள்ளது. அவர்கள் பொது பதிவுகளில் கருத்துக்களை பகிர்வதைவிட தனிப்பட்ட குழு உரையாடல்கள், நண்பர்களுக்கான தனி கணக்குகள் அல்லது நேரடி செய்திகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது.

தேவையற்ற ஒப்பீடுகள் குறைகின்றன. இளம் பயனர்கள் இணையத்தில் சுறுசுறுப்பாக இருந்தாலும், தங்கள் சொந்த ஊட்டங்களில் (insta feed) பதிவிடாமல் இருப்பதையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

தனியுரிமை குறித்த கவலைகள், சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற அழுத்தம் மற்றும் டிஜிட்டல் சோர்வு ஆகியவை அதிகரிப்பதால், பொது ஊட்டங்கள் காலியாகவே இருக்கின்றன. தொடர்ந்து பதிவுகளை தொகுப்பது சோர்வூட்டுவதாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இது ஒருபுறம் சமூக வலைத்தளங்களை முற்றிலும் புறக்கணிப்பது போல தோன்றினாலும், மறுபுறம் அவர்கள் தொடர்ந்து ஸ்க்ரோல் செய்கிறார்கள், லைக் செய்கிறார்கள் மற்றும் ட்ரெண்டுகளை கவனிக்கிறார்கள். ஆனாலும், அவர்களின் சுய விவரங்கள் வேண்டுமென்றே காலியாகவே வைக்கப்படுகின்றன. இச்செயல் தனிஉரிமைக்கான விருப்பத்தையும், ஒரு கச்சிதமான ஆன்லைன் ஆளுமையை உருவாக்க வேண்டும் என்ற அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிடுவது ஒரு போலியான பிம்பத்தை உருவாக்குவது போலவும் சுமையாக உணரப்படுவதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர். பெரும்பாலான பயனர்கள் இது போன்ற மனநிலையில் தனிப்பட்ட வாழ்க்கையை பதிவிடுவதிலிருந்து பின்வாங்குவதால், தனிப்பட்ட பதிவுகள் குறையும், அதே நேரத்தில் பிராண்டட் மற்றும் தொகுக்கப்பட்ட உள்ளடக்கம் போன்றவை வளரும்.

பலருக்கும் இந்த போஸ்டிங் ஜீரோ தங்கள் டிஜிட்டல் அடையாளத்தின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கான ஒரு நுட்பமான வழியாக மாறியுள்ளது. தற்போது படைப்பாளிகள், தொழில்முனைவோர், சிறு வணிகர்கள் போன்றோருக்கு சமூக வலைத்தளப் பதிவுகள் முக்கியமான கருவியாகவே உள்ள நிலையில், அனைவருக்கும் ‘Posting Zero’ பொருந்தும் என்று சொல்ல முடியாது. இது ஒவ்வொருவரின் வாழ்க்கைமுறை, தொழில் மற்றும் தேவையை பொறுத்த ஒரு தனிப்பட்ட முடிவு.

தொகுப்பு: ஆர்.ஆர்