நன்றி குங்குமம் தோழி
''பொதுவாக பள்ளிகளில் ஆங்கில சொற்களான A,B,C,Dயினை ஏ,பி,சி,டி என்றுதான் சொல்லிக் கொடுத்து வந்தார்கள். ஆனால், இன்று அதனை ஒலி மூலமாக குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறார்கள். இதனால் முதலாம் வகுப்பு படிக்கும் குழந்தையால் ஆங்கில வார்த்தையை எளிதாக எழுத்துக்கூட்டி படிக்கவும், எழுதவும் முடியும்’’ என்கிறார் பெங்களூரை சேர்ந்த சங்கீதா. இவர் ‘போனிக்ஸ்’ முறையில் ஆங்கிலத்தினை சரியாக உச்சரிக்கவும், எளிதாக படிக்கவும், எழுதவும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ‘Klariti Learning’ என்ற பெயரில் பயிற்சியளித்து வருகிறார்.
‘‘என் சொந்த ஊர் கோவை. நான் ஐ.டியில் வேலை பார்த்து வந்தேன். அதன் பிறகு என் கணவரின் வேலை காரணமாக நாங்க குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று விட்ேடாம். கணவருடன் டிபென்டென்ட் விசாவில் இருந்ததால் என்னால் அங்கு வேலை பார்க்க முடியாது. என் பசங்க படிக்கும் பள்ளியில் நான் வாலன்டியரா செல்வேன். அங்கு குழந்தைகளுக்கு எப்படி பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதை நான் ஆர்வமாக கவனிப்பேன். மேலும், அங்குள்ள நூலகங்களிலும் நான் வாலன்டியரா வேலை பார்த்தேன். அதாவது, புத்தகங்களை அடுக்கி வைப்பது, ஸ்டிக்கர் ஒட்டுவதுன்னு நான் நூலகத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வேன். இப்படித்தான் என் நேரத்தை கழித்து வந்தேன்.
அந்த சமயத்தில்தான் எனக்கு குழந்தைகள் சார்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மான்டசரி பயிற்சி எடுத்தேன். அதன் பிறகு அங்குள்ள பள்ளிகள் எவ்வாறு இயங்குகிறது... போனிக்ஸ் முறையில் எப்படி படிக்க கற்றுத் தராங்கன்னு எல்லாம் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு நாங்க இந்தியாவிற்கு திரும்பி விட்டோம். பெங்களூரில் செட்டிலானோம்’’ என்றவர் போனிக்ஸ் பயிற்சி குறித்து விவரித்தார்.‘‘நாங்க இந்தியா வந்த போது கோவிட் காலம். அந்த சமயத்தில் என்னுடைய நேரத்தை நான் பயனுள்ளதாக கழிக்க விரும்பி, போனிக்ஸ் குறித்து முறையான பயிற்சி எடுத்துக் கொண்டேன். நான் கற்றுக் கொண்ட பயிற்சி என் மகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
காரணம், அவள் போனிக்ஸ் முறையில் ஆங்கில வார்த்தைகள் எளிதாக படிக்கவும் எழுதவும் செய்தாள். இதனால் மற்ற குழந்தைகளும் பலன் அடையட்டும் என்று நினைத்தேன். ஆன்லைனில் பயிற்சி அளிக்க துவங்கினேன். ஆரம்பத்தில் நான் மட்டுமே பயிற்சி அளித்து வந்தேன். மாணவர்கள் அதிகமானதால் என்னால் தனியாக செயல்பட முடியவில்லை. அதனால் ஆசிரியர்களை வேலைக்கு நியமிக்க முடிவு செய்தேன்.
அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க துவங்கினேன். எங்களின் இந்தப் பயணம் விரிவடைந்ததால், ஒரு நிறுவனமாக செயல்பட முடிவு செய்தோம். எங்க நிறுவனத்தை முறையாக பதிவு ெசய்து ஆன்லைனில் பயிற்சியினை முழு மூச்சாக தொடர்ந்தோம். போனிக்ஸ் மட்டுமில்லாமல் கிரியேடிவ் ரைட்டிங் குறித்த பயிற்சியும் அளிக்கிறேன்’’ என்றவர் போனிக்ஸ் மற்றும் கிரியேடிவ் ரைட்டிங் இரண்டுக்குமான பாடத்திட்டங்கள் வகுத்து இதுவரை 750ல் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
‘‘கல்வி சார்ந்த பயிற்சி ஆரம்பிக்கும் போது நாம் முறையாக பயின்று இருக்க வேண்டும். அதனால் மான்டசரி, போனிக்ஸ் இரண்டிலும் நாங்க பயிற்சிகள் பெற்றிருக்கிறேன். அதன் பிறகு என்னிடம் ஆசிரியராக பயிற்சி பெறுபவர்களுக்கு எவ்வாறு சொல்லித் தந்தால் அவர்கள் குழந்தைகளுக்கு எளிதாக புரியவைப்பார்கள் என்று சிந்தித்து பாடத்திட்டங்களை அமைத்தேன். மேலும், மான்டசரி முறைக்கு ஏற்ப பாடத்திட்டங்களை வடிவமைத்தோம். சொற்களின் உச்சரிப்பு மட்டுமே.
போனிக்ஸ் மற்றும் எழுதுவது, கிரியேடிவ் ரைட்டிங் கிடையாது. பயிற்சிகள் முறையில் அளிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும் படி பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். அதனால் என்னுடைய பாடத்திட்டத்தில் கதை, பாட்டு மட்டுமில்லாமல் சில செயல்முறை பயிற்சிகளும் இருக்கும். இவ்வாறு எல்லாம் இணைந்து தருகிறோம். போனிக்ஸ் படிக்கவும் எழுதவும் உதவும். அதே சமயம் நாம நினைப்பதை அழகான கதையாக எழுத கிரியேடிவ் சிந்தனை அவசியம். கதை எழுத மட்டுமில்லை நம் மனதில் இருப்பதை வெளிப்படுத்த குழந்தைகளுக்கு தெரியணும்.
அவ்வாறு அவர்கள் வெளிப்படுத்துவதை ரசிக்கக்கூடிய எழுத்தாக மாற்றுவதுதான் கிரியேடிவ் ரைட்டிங். பொதுவாக தமிழில் அ என்றால் அ என்றுதான் உச்சரிப்போம். ஆங்கிலத்தில் A வினை ஏ என்றுதான் நாம் படித்து வந்தோம். ஆனால், போனிக்ஸ் முறையில் அதனை அ என்று உச்சரிப்பார்கள். இதுபோல் ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கும் ஒலி மூலமாக உச்சரிப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு Cat. இதில் C யினை க என்றும், Aயினை அ என்றும், Tயினை ட என்றும் உச்சரிக்க வேண்டும். மூன்று எழுத்தின் ஒலிகளை இணைத்து கஅட் என்று படிக்கும் போது (Cat) உச்சரிப்பு வரும். ஒலிகளைக் கொண்டு வார்த்தையாக படிப்பது எளிது.
குழந்தைகளுக்கு முதலில் ஒலியை சொல்லிக் கொடுப்பதால், அவர்களால் எளிதாக படிக்கவும் எழுதவும் முடிகிறது. போனிக்ஸ் பயிற்சியினால் ஒன்றாம் வகுப்பு குழந்தையால் ஆங்கில வாக்கியத்தை எளிதாக படிக்க முடியும். மேலும், மொழியினை எளிதாக பயிலவும் வழிவகுக்கும். அதன் காரணமாகத்தான் பெரும்பாலான பள்ளிகளில் இதனை பின்பற்றுகிறார்கள்’’ என்றவர், கிரியேடிவ் ரைட்டிங் பயிற்சி குறித்து விவரித்தார்.
‘‘எண்ணங்களை வெளிப்படுத்துவதுதான் கிரியேடிவ் ரைட்டிங். உதாரணத்திற்கு குழந்தை தனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும் என்று கூறுவதோட நிறுத்தாமல், அதிலுள்ள ஃபிளேவர் மற்றும் டாப்பிங்க்ஸ் அதன் சுவைப் பற்றி கோர்வையாக சொல்வதை எவ்வாறு எழுதலாம் என்பதை சொல்லித் தருகிறோம். இதில் கதை, கவிதை அல்லது அவர்களுக்கு மனதில் தோன்றும் விஷயங்களை முறைப்படி எழுத வேண்டும். நாங்க முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில்தான் எடுக்கிறோம். ெவளிநாட்டில் இருந்தும் மாணவர்கள் பயில்கிறார்கள்.
இதில் போனிக்சிஸ் மற்றும் கிரியேடிவ் ரைட்டிங் இரண்டுமே மூன்று மாதப் பயிற்சி. நான்கு முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கான பேஸிக் மற்றும் அட்வான்ஸ்ட் பயிற்சிகள் உள்ளது. இதில் அட்வான்ஸில் பெரிய வார்த்தைகளை படிப்பது, எழுதுவதற்கான பயிற்சி கொடுப்போம். குழந்தைகள் மட்டுமில்லாமல் எங்களிடம் பயிற்சி பெறும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் பயிற்சியினை சான்றிதழுடன் அளிக்கிறோம். அடுத்து பப்ளிக் ஸ்பீக்கிங் குறித்த பயிற்சி அறிமுகம் செய்திருக்கிறோம்.
மேலும், நிறைய குழந்தைகளை நாங்க சென்றடைய வேண்டும் என்பது அடுத்தகட்ட திட்டமாக வைத்திருக்கிறோம். நிறைய பெண்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்ற சங்கீதா இந்தாண்டு SIWAA விருதினை பெற்றுள்ளார்.
தொகுப்பு: ரிதி


