நன்றி குங்குமம் தோழி
ஆலிவ் எண்ணெய் மற்ற எண்ணெய்களை ஒப்பிடும் போது அதன் சுவை மற்றும் சத்துகளில் மாறுபடுகிறது. ஆலிவ் எண்ணெய் விதைகளிலிருந்து இல்லாமல் பழத்திலிருந்து எடுக்கப்படுவதால் நச்சுத் தன்மைகளை நீக்கும் Anti oxidants நிறைந்தது. இதய நோய்கள், ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் மற்றும் புற்றுநோய் தடுக்கப்படுகிறது. ஆலிவ் எண்ணெயினால் சமைக்கும் போது அதில் உள்ள Mono-Unsaturated Fats, இதய நோய்களை தடுக்கிறது. கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்துகிறது.
ஆலிவ் எண்ணெய் உபயோகிப்பதன் மூலம் HDL எனப்படும் நல்ல கொழுப்புச் சத்து அதிகரித்து LDL எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவினை குறைக்க உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவில் 20% Mono Unsaturated Fats அவசியம் என்று தேசியக் கல்வி கொலஸ்ட்ரால் திட்டம் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு பல நன்மைகள் கொண்ட ஆலிவ் எண்ணெயினை நம்முடைய உணவின் சமைக்கும் முறைக்கு ஏற்ப ‘அதீனா’ ஆலிவ் எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
ஆலிவ் மரம் தொன்மையானது. மிகவும் புனிதமானது. இது மத்திய தரைக்கடல் நாடுகளில் பரவலாகவும், ஆப்ரிக்காவின் வடமேற்கு பகுதிகளில் மிதமான சீதோஷ்ண நிலைகளில் வளர்கிறது. ஆலிவ் பழத்தினை கூழாக்கிய பின், அதிலிருந்து மூன்று வகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது.
* க்ஸ்ட்ரா வெர்ஜின் எண்ணெய்: ேகால்ட் பிரஸ் முறையில் எடுக்கப்பட்ட முதன்மை வாய்ந்த ஆலிவ் எண்ணெய். இதில் அமிலத்தன்மை 0.8% குறைவாக உள்ளது. அபாரமான சுவையும், அருமையான மணமும் இதன் சிறப்பு அம்சங்கள். உணவின் தரத்தினை மிகைப்படுத்தும். சாலட், சாஸ் மற்றும் ஊறுகாய்களில் உபயோகிக்கப்படுகிறது.
* சுத்தமான ஆலிவ் எண்ணெய்: இது சுத்திகரிக்கப்பட்டது. அமிலத்தன்மை அதிகமுள்ளது. ‘Stir Frying’ உணவுத் தயாரிப்பில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. பாதுகாப்பான சமையலுக்கு மிகவும் உகந்தது.
* லிவ் போமேஸ் எண்ணெய்: இந்திய உணவுப் பொருட்கள் தயாரிப்புகளுக்கு மிகவும் உகந்த எண்ணெய். உயர் வெப்ப நிலையில் சமைக்கலாம், பொரிக்கலாம். மூன்று முறை வரை மீண்டும் உபயோகிக்கலாம். இந்த எண்ணெய் தரம் மாறாமல் இருக்கும். மற்ற சமையல் எண்ணெய்களை ஒப்பிடும் போது அதிகளவு உபயோகப்படுத்த தேவையில்லை. குறைந்த அளவு எண்ணெய் உபயோகிப்பதால், ஆரோக்கியமான உடல்நிலையை தருகிறது. மற்ற எண்ணெய்களை போல் இல்லாமல் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உபயோகப்படுத்தப்படுவதால், எண்ணெயின் செலவும் கட்டுப்படுத்தப்படுகிறது.
தொகுப்பு: நிஷா



