நன்றி குங்குமம் தோழி
ஒவ்வொரு வருடமும் மெட்ராஸ் தினம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த மாதம் முழுதும் சென்னையில் பல விழாக்கள், நிகழ்வுகளை பார்க்கலாம். 387வது ஆண்டான இந்த வருடம் அதன் நினைவாக மெட்ராஸின் முக்கிய அடையாளமாக திகழும் ‘மெட்ராஸ் கட்டங்கள்’ டிசைன்களை எங்களின் நாற்காலியில் அறிமுகம் செய்திருக்கிறோம்’’ என்கிறார்கள் வுட்பெக்கர் அறைகலன் நிறுவனத்தின் நிறுவனரான விஜி மற்றும் சுவாமிநாதன் தம்பதியினர்.
‘‘நான் என் கணவருடன் இந்தோனேஷியாவில் வசித்து வந்தேன்’’ என்று பேசத் துவங்கினார் விஜி. ‘‘நான் என் குழந்தைக ளின் படிப்பிற்காக இந்தியாவிற்கு திரும்பி வந்துவிட்டேன். அவர் மட்டும் இந்தோனேஷியாவில் இருந்தார். என் வீட்டிற்காக கம்ப்யூட்டர் மேஜை ஒன்றை வாங்கிய போது, அதற்கான விலையினை யாரும் சரியாக நிர்ணயிக்கவில்லை. அடுத்து அதை வீட்டில் வந்து பொருத்த டெலிவரிக்காக தனிப்பட்ட தொகையினை கேட்டார்கள். இவை என்னை யோசிக்க வைத்தது. ஒவ்வொரு பொருட்களும் வாங்க போராட்டமாக இருப்பதாக என் கணவரிடம் கூறினேன். அதற்கு அவர் நாமே ஏன் அறைகலன் குறித்த பிசினஸினை துவங்கக்கூடாதுன்னு கேட்டார். எனக்கு அந்த ஐடியா நன்றாக இருந்தது. முதல் கட்டமாக சோஃபா மற்றும் கம்ப்யூட்டர் மேஜைகளை மட்டும் நாங்க இறக்குமதி செய்ய ஆரம்பித்தோம்’’ என்றவரை தொடர்ந்தார் சுவாமிநாதன்.
‘‘நான் இந்தோனேஷியாவில் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்து வந்தேன். விஜி அங்கு இருந்த வரை நடனம், ஆசிரியர் என பல வேலைகளில் ஈடுபட்டு வந்தார். சென்னையில் அறைகலன் பிசினஸ் ஆரம்பித்த இரண்டு வருடம் கழித்துதான் நான் இங்கு வந்தேன். ஆரம்பத்தில் சாதாரண கேரேஜில்தான் எங்க பிசினஸ் நடந்து வந்தது. நான் இங்கு வந்த பிறகுதான் ஷோரூமாக மாற்றினோம்.
பொதுவா கட்டில், பீரோ, சோபா போன்ற பொருட்களை தச்சரை வீட்டிற்கு வரவழைத்து இடத்திற்கு ஏற்ப அளவு எடுத்து செய்வார்கள். அப்படி இல்லாமல் அதே தச்சர்கள் ஏற்கனவே ரெடிமேடாக ெசய்து வைத்திருக்கும் பொருட்களை வாடிக்கையாளர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம் என்பதை நாங்க மக்கள் முன் கொண்டு சென்றோம். எல்லாவற்றையும் விட அவர்கள் கடைகளில் பார்க்கும் அதே பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என்று உத்தரவாதம் தந்தோம்.
புதுமையாக செயல்பட்டாலும் மக்களின் மனதில் அவ்வளவு எளிதாக நாங்க இடம் பிடித்துவிடவில்லை. கடின உழைப்புதான் எங்களுக்கான ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது’’ என்றவர், 26 வருடங்களாக வெற்றிகரமாக இந்த பிசினஸில் ஈடுபட்டு வருகிறார்.
‘‘இந்தோனேஷியாவில் பல ஆண்டுகள் இருந்ததால், முதலில் அங்கிருந்துதான் அறைகலன் பொருட்களை இறக்குமதி செய்தோம். மேலும், எனக்கும் என் கணவருக்கும் வீட்டை அழகாக அலங்கரிக்க பிடிக்கும். அதற்கான தனிப்பட்ட பிரியம் இருவருக்குமே இருந்தது. நாங்க பல வீடுகள் மாறிய போதும் இதுநாள் வரை இன்டீரியர் டிசைனர்களை நியமித்தது இல்லை. இருவருமாக சேர்ந்துதான் எங்களின் வீட்டிற்கு தேவையான அறைகலன்களை அமைத்திருக்கிறோம். அதனால் பொருட்களை வாங்குவதில் எங்களுக்கு பிரச்னை ஏற்படவில்லை. ஆனால், ஒரு பெண்ணாக நான் இந்தத் தொழிலை அமைத்த போது பிசினஸ் ரீதியாக பல பிரச்னைகளை ஆரம்பத்தில் சந்தித்தேன். சிலர் ஒரு சிறு தொகையினை கட்டிவிட்டு பொருட்களை எடுத்து சென்றுவிடுவார்கள். மீதமான தொகையினை அவர்களிடம் இருந்து பெறுவது பெரிய போராட்டமாக இருக்கும்.
நாங்க பிசினஸ் ஆரம்பித்த போது சமூக வலைத்தளங்கள் எல்லாம் கிடையாது. வாய் வார்த்தையாகத்தான் எங்களை நாடி வருவார்கள். இவர் வரும் வரை குடும்பம், குழந்தைகள், பிசினஸ் என அனைத்தும் ஒரே ஆளாகத்தான் சமாளித்தேன். கடையினை கூட வாடிக்கையாளர்கள் வரும் போதுதான் திறப்பேன். நாங்க இருவரும் தொலைபேசி மூலமாக பேசிதான் படிப்படியாக இந்த பிசினஸை உருவாக்கினோம். பிரச்னை வந்தால் அதற்கான தீர்வு கண்டிப்பாக இருக்கும். அதனால் பிரச்னையை கண்டு துவண்டுவிடாமல், அதற்கு என்ன தீர்வு என்று ஆலோசித்து சரி செய்வாம். அதனால்தான் எங்களால் இந்த பிசினஸினை இவ்வளவு காலம் வெற்றிகரமாக செய்ய முடிந்திருக்கிறது என்று நினைக்கிறோம்’’ என்றவரை தொடர்ந்தார் சுவாமிநாதன்.
‘‘பிசினஸ் பொறுத்தவரை நாம் அகலக்கால் வைக்க முடியாது. அதனால் கம்ப்யூட்டர் டேபிள், சோபா செட்கள்தான் முதலில் விற்பனை செய்தோம்
அதைத் தொடர்ந்து கட்டில், வார்ட்ரோப், டிரெஸ்ஸிங் டேபிள், சென்டர் ேடபிள் என படிப்படியாக விற்பனைக்காக அறிமுகம் செய்தோம். எங்களின் சிறப்பே வரவேற்பு அறைக்கான அறைகலன்கள்தான். அதாவது, ரெக்லைனர்கள், சோபா செட்கள், டைனிங் டேபிள் போன்றவை. அடுத்து தரம், அதில் நாங்க காம்ப்ரமைஸ் செய்வதில்லை. மூன்றாவது அறைகலன்களுக்கு நாங்க கொடுக்கும் வாரன்டி மற்றும் மெயின்டெனன்ஸ் வசதி. அதாவது, எங்களிடம் வாங்கும் ெபாருட்களை பராமரிப்பது முதல் பழுது பார்ப்பது என மூன்று வருடங்கள் நாங்க பார்த்துக் கொள்வோம். எல்லாவற்றையும் விட வாடிக்கையாளர்களிடம் இருக்கும் பழைய அறைகலன் பொருட்களை நாங்க விலைக்கும் வாங்கிக் கொள்கிறோம். விருப்பப்பட்டால் மாற்றம் செய்தும் தருகிறோம். ேமலும், உங்க வீட்டிற்கு எந்த இடத்தில் எந்த மாதிரியான அறைகலன் பொருந்தும் என்ற ஆலோசனையும் வழங்குகிறோம். அதற்காக தனிக்குழுவும் அமைத்திருக்கிறோம். ஆரம்பத்தில் நாங்க அறைகலன்களை வாங்கி விற்பனை செய்து வந்தோம். வாடிக்கையாளர்கள் கஸ்டமைஸ் செய்ய சொல்லி கேட்டுக் கொண்டதால், நாங்களே அதை வடிவமைக்க ஆரம்பித்தோம். அதற்கான தனி யூனிட் அமைத்திருக்கிறோம்’’ என்றவர், மெட்ராஸ் தினத்தினை முன்னிட்டு கட்டங்கள் டிசைன் ரெக்லைனர் மற்றும் சேர்களை அறிமுகம் செய்துள்ளதாக கூறினார்.
‘‘வருடா வருடம் மெட்ராஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் கட்டங்கள் டிசைன்கள் இந்த தினத்தின் டிரெண்டாக மாறிவிட்டது. புடவை, சுடிதார் போன்ற உடைகளில் இந்த டிசைன்கள் இப்போது டிரெண்டாகி வருகிறது. அதை நாங்க எங்களின் அறைகலன்களில் அமைக்க முடிவு செய்தோம். ரெக்லைனர் மற்றும் சோபா செட்களில் வண்ண வண்ண கட்டங்கள் டிசைன்களை அறிமுகம் செய்திருக்கிறோம். எங்களின் மற்ற அறைகலன்களுடன் இந்த கட்டங்கள் டிசைன்களும் கடைகளில் மட்டுமில்லாமல் ஆன்லைனிலும் கிடைக்கும். வருங் காலங்களில் இதுபோல் புதிய கலெக் ஷன்களை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. மேலும், பல திட்டங்கள் உள்ளது’’ என்றனர் விஜி மற்றும்
சுவாமிநாதன் தம்பதியினர்.
தொகுப்பு: ஷம்ரிதி

