Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சருமப் பளபளப்புக்கு கஸ்தூரி மஞ்சள்!

நன்றி குங்குமம் தோழி

விரலி மஞ்சளை விட கஸ்தூரி மஞ்சள் அதிக மணமுடையது. ஒரு அழகு சாதனப் பொருளாகவே கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. இதனை அரைத்து பூசி குளிக்கும் போது நல்ல மணமும், அழகும் கிடைக்கிறது. முகப்பரு, வியர்க்குரு, தேமல், சொறி சிரங்கு, சேற்றுப்புண் போன்றவைகள் வராமல் மேனியை பாதுகாக்கிறது.

கஸ்தூரி மஞ்சளும், சந்தனமும் கலந்து முகத்தில் பூசி வர கரும்புள்ளி, வடுக்கள் மாறி முகம் பளபளப்பு பெறும். கஸ்தூரி மஞ்சள், பயறு மாவு, தயிர் இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவி வர முகத்தில் வரும் கட்டி, முகச்சுருக்கம், கருவளையம், வெயிலில் திரிவதால் வரும் கருமை நிறம் போன்றவை மாறி விடும்.

எலுமிச்சை சாறு, கஸ்தூரி மஞ்சள், சிறிது தேங்காய் எண்ணெய் இவற்றை கலந்து பூசி வர முகம் வசீகரமாக தோன்றும். தோல் மென்மையடையும்.

பிறந்த குழந்தைகளுக்கு கெமிக்கல் கலந்த எண்ணெய், மசாஜ் க்ரீம், சோப், ஷாம்பூ என பல வகைகள் நல்லதா, பக்க விளைவு என்ன என்பதை தெரியாமல் பயன்படுத்தி வருகிறோம். மிக எளிமையாக பச்சைப் பயறு, கஸ்தூரி மஞ்சளை மட்டுமே தேவையான அளவு பாலில் கலந்து குழந்தைகளின் உடலில் தடவி பூசி குளிக்க செய்வது மிகச் சிறந்தது. இது குழந்தையின் தோலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. நல்ல கிருமி நாசினியாக செயல்படுகிறது. ஒவ்வாமை, தோலில் சிவப்பு தடிப்புகள் போன்றவை வராது. கஸ்தூரி மஞ்சளின் நறுமணம் குழந்தைக்கும் நல்ல புத்துணர்ச்சியை தருகிறது.

கஸ்தூரி மஞ்சளை நல்லெண்ணெயில் விட்டு காய்ச்சி எடுத்து உடல் வலி, அடிபட்ட வலி போன்றவைகளுக்கு இந்த எண்ணெயை போட நல்ல குணம் தெரியும்.குளிப்பதற்கு இந்த மஞ்சளை பூசி குளிப்பது என்பது பொதுவாக வழக்கத்தில் உள்ளதே. இதனால் உடலுக்கு நல்ல பொன்னிறமும், நல்ல மணமும் ஏற்படும். உடல் துர்நாற்றம் நீக்க பெரிதும் பயன்படுகிறது.சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் மூளை நரம்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகிறது.

- எம்.நிர்மலா, புதுச்சேரி.