Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முகத்தை பளபளப்பாக்கும் ஜூஸ்கள்!

நன்றி குங்குமம் தோழி

கேரட் ஜூஸ்: சருமத்திற்கு அனைத்து வகையான நன்மைகளையும் தரக்கூடிய காய்கறிகளில் கேரட்டும் ஒன்று. கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கின்றது. இந்த பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ சத்தாக மாற்றப்பட்டு சருமத்திற்கு இன்றியமையாத ஊட்டச்சத்தாக வழங்கப்படுகின்றது.

பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட் சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றது. பீட்ரூட்டில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. இதனால் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றது. மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி சருமத்தை பளபளப்பாக மாற்றுகின்றது.

வெள்ளரி ஜூஸ்: சருமத்திற்கு நன்மைகள் தரக்கூடிய பொருட்களில் வெள்ளரியும் ஒன்று. இந்த வெள்ளரியை பச்சையாகவும் சாப்பிடலாம். இந்த வெள்ளரியில் நீர்ச்சத்துக்கள் அதிகம். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றது.

தக்காளி ஜூஸ்: தக்காளியை பச்சையாக சாப்பிட்டாலும் சரி அல்லது ஜூஸ் செய்து குடித்தாலும் சரி. அதுவும் இல்லையென்றால் தக்காளியை வெட்டி முகத்தில் தேய்த்தாலும் சரி சருமம் ஆரோக்கியமாக இருக்கும். தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவி செய்கின்றது.

கீரை ஜூஸ்: கீரையை ஜூஸ் செய்து குடித்து வந்தால் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் சருமத்தை பளபளப்பாக மாற்றவும் கீரையில் உள்ள வைட்டமின்கள் உதவுகின்றது.

செலரி ஜூஸ்: செலரி ஜூஸ் சருமத்தை பளபளப்பாக மாற்றுவதிலும் சருமத்திற்கு ஆரோக்கியத்தை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. செலரியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் இருக்கிறது. இதனால் சருமத்தை ஆரோக்கியமாகவும், ஈரப்பதத்தை சமநிலையில் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

தொகுப்பு:  எம்.பவித்ரா, திண்டிவனம்