Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகளின் கற்பனைக்கு வண்ணம் சேர்க்கும் ‘Infinite Expression’

நன்றி குங்குமம் தோழி

டெசின் அகாடமி நடத்தும் ‘இன்ஃபினிட் எக்ஸ்ப்ரஷன் 2026’ கலைக் கண்காட்சி, நிறுவனர் ராஜேந்திரன் மற்றும் அதன் இயக்குனர் சுதா ராஜேந்திரன் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு லலித் கலா அகாடமியில் நடைபெற்றது. கடந்த ஜூலை 24ம் தேதி முதல் ஜூலை 30 வரையிலும் நடைபெற்ற இக்கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் இளம் கலைஞர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் 4 முதல் 19 வயது வரையிலான இளம் கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இன்றைய குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் மொபைல் போன்களும் தொலைக்காட்சியும் அதிக இடத்தைப் பிடித்துள்ளன. அதிகரித்து வரும் திரை நேரத்திலிருந்து குழந்தைகளை விலக்கி, அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலையும் கற்பனைத் திறனையும் வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பாக நடைபெற்றது ‘Infinite Expression 2026’ கலைக் கண்காட்சி.

“Infinite Expressions என்பது குழந்தைகளின் ஓவியத் திறமையை மட்டும் வெளிப்படுத்தும் ஒரு கண்காட்சி மட்டுமின்றி, கலைப் பயிற்சி மூலம் குழந்தைகளின் கற்பனைத்திறன், படைப்பாற்றல், கவனக்கூர்மை, பொறுமை, தன்னம்பிக்கை, பிரச்னைகளை எதிர்கொள்ள புதிய கோணத்தில் சிந்திக்கும் திறன் போன்ற வாழ்க்கைக்கு தேவையான பல திறன்களை வளர்த்துக்கொள்ளும் ஒரு பாலமாக உள்ளது. இன்றைய உலகில் கலை என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல; அனிமேஷன், கிராஃபிக் டிசைன், ஆர்க்கிடெக்சர், ஃபேஷன் டிசைன், கேம் டிசைன், யுஐ/யுஎக்ஸ் டிசைன், இலஸ்ட்ரேஷன், ஃபைன் ஆர்ட்ஸ், விஷுவல் கம்யூனிகேஷன், ஆர்ட் தெரபி போன்ற பல துறைகளில் உலகளாவிய அளவில் சிறந்த தொழில் வாய்ப்புகளை இது உருவாக்குகிறது. ஒரு குழந்தையின் கையில் இன்றிருக்கும் தூரிகை, நாளை அவர்களின் கனவுகளையும், எதிர்காலத்தையும் வரையக்கூடிய சக்தியாக மாறலாம். அதற்கான முதல் படிதான் ‘Infinite Expressions’” என்று சுதா ராஜேந்திரன் குறிப்பிடுகிறார். குழந்தைகளின் உலகம் வண்ணங்களால் நிறைந்தது. அந்த வண்ணங்களை அவர்கள் தங்கள் கைகளால் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே அவர்களுக்குத் தரக்கூடிய மிகச்சிறந்த ஊக்கங்களில் ஒன்றாக இருக்கலாம்

தொகுப்பு: ஆர்.ஆர்