Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீட்டுக் குறிப்புகள்

நன்றி குங்குமம் தோழி

* நெயில் பாலீஷ் நீண்ட நாள் காயாமல் இருக்க அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஒரு வருடம் வரை பாதுகாக்கலாம்.

* இழைக்கோலம் போட அரிசி ஊற வைக்கும்போது ஒரு கைப்பிடி உளுத்தம் பருப்பையும் சேர்த்து அரைத்துப் போட்டால் பெயின்ட் செய்தது போல் நான்கைந்து நாட்களுக்கு கலையாமல் இருக்கும்.

* சுத்தமான தண்ணீரில் ஐந்தாறு நெல்லைக் கழுவி அதை பாலில் போட்டு வைத்தால் பால் ஒருநாள் முழுவதும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

* கோந்துப் புட்டியை அதிக நாள் பயன்படுத்தாமல் இருந்தால் கட்டியாகிவிடும். அப்படி நேர்ந்தால் சிறிதளவு வினிகரை புட்டிக்குள் ஊற்றினால் கோந்து இளகி விடும்.

* பிஸ்கெட்டுகள் நமுத்துப் போய்விட்டால் கவலை வேண்டாம். குக்கர் விசில் சத்தம் வந்து நிறுத்திய பிறகு குக்கர் மூடியின் மீது பிஸ்கெட்டுகளை பரவலாக போட்டு வைத்து விட்டால் சிறிது நேரத்திலேயே முன்பு இருந்ததை விட மொறுமொறுப்பான பிஸ்கெட்டுகள் கிடைக்கும்.

* எலுமிச்சம் பழத்தை பாலித்தீன் கவரில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் 2 வாரங்கள் வரை பழம் வாடாமல் இருக்கும்.

* ஜிப் வைத்து தைத்த பர்ஸ், கைப்பை போன்றவற்றில் அது சிக்கிக் கொண்டு நகர மறுப்பதுண்டு. அந்த இடத்தில் மெழுகுவர்த்தி அல்லது சோப்பை சில முறை தேய்த்து விட்டு பிறகு இழுத்தால் ஜிப் சுலபமாக நகரும்.

* ரப்பர் பேண்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு விடும். அதைத்தடுக்க ரப்பர் பேண்ட் உள்ள டப்பாவில் சிறிதளவு டால்கம் பவுடரைத் தூவி வைத்தால் அவை ஒட்டாது. புத்தம் புதிதாக நீண்ட நாட்களுக்கு அவை அப்படியே இருக்கும். பசைத் தன்மை ஏற்படாது.

* பயறு சுண்டல் செய்ய 8 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து ஹாட்பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளைகட்டிய பயறு தயாராகி விடும்.

- லதா, நீலகிரி.