Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

10 நிமிடங்களில் கண் முன்னே தயாராகும் ‘ஃப்ரூட் பாப்சிகல்ஸ்’!

90களில் குறிப்பாக வெயில் காலத்தில் தள்ளுவண்டியில் ‘குச்சைஸ்... பாலஸ்’ என்று சத்தம் கேட்ட அடுத்த நிமிடம் குழந்தைகள் எல்லோரும் தெருவில் இருப்பார்கள். ஆரஞ்ச், கிரேப் எசென்ஸ் சுவையில் விற்பனை செய்யப்படும் குச்சைஸ்கள் உண்மையான பழச்சாறில் இருந்து தயாரிக்கப்பட்டதில்லை என்று தெரிந்திருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனை விரும்பி சாப்பிட்டார்கள். எந்தவித ரசாயனக் கலவை இல்லாமல் முழுக்க முழுக்க பழங்களை கொண்டு ‘நேச்சுரோல்ஸ்’ என்ற பெயரில் குச்சைஸ்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் சென்னையை சேர்ந்த இலக்கியா.

‘‘நான் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்து வந்தேன். ஆசிரியர் துறை சார்ந்து படிச்சிருந்தாலும், என் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கும் என்பதால், செய்தி வாசிப்பாளருக்கு விண்ணப்பிக்க ெசான்னார்கள். தொலைக்காட்சி ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு வயசு 19. சில காலம் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்தேன். ஆனால், எனக்கு எப்போதும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

இதற்கிடையில் எனக்கு திருமணமானது. குழந்தை பிறந்த பிறகு என்னால் செய்தி வாசிப்பாளர் வேலையில் தொடர முடியவில்லை. அதே சமயம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. நானும் என் கணவரும் பிசினஸ் செய்யலாம்னு முடிவு செய்தோம்’’ என்றவர் ஏ.சி சர்வீஸ் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.

‘‘நாங்க சர்வீஸ் மட்டுமில்லை, ஏசி, கூலர் போன்ற உபகரணங்களை ரீடெயில் முறையில் விற்பனையும் செய்து வந்தோம். ஏசி மட்டுமில்லாமல் கூலர், கோல்ட் ஸ்டோரேஜ் முதற்கொண்டு நாங்க விற்பனை மற்றும் சர்வீஸும் செய்து வந்தோம். பிசினஸ் நல்லா ேபாயிட்டு இருந்தது. ஆனால், வேலைக்கான ஆட்கள் பற்றாக்குறை காரணத்தினால் பிசினஸை பாதிச்சது. அந்த சமயத்தில் யாரையும் நம்பி பிசினஸில் ஈடுபடக்கூடாதுன்னு முடிவு செய்தோம்.

என் கணவர் குளிர்சாதனங்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பது குறித்து படித்திருந்ததால், அது சம்பந்தமா இயந்திரம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார். பெரிய தொகை செலவு செய்து ஐஸ்கிரீம் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தோம். இன்று மார்க்கெட்டில் விற்பனை செய்யக்கூடிய ஐஸ்கிரீம்களில் பெரும்பாலும் பிரிசர்வேடிவ் சேர்க்கப்படுகிறது. அப்படி இல்லாமல் ஆரோக்கியமான முறையில் தயாரித்து கொடுக்கலாமேன்னு எண்ணம் ஏற்பட்டது. அப்படி உருவானதுதான் எங்களின் இன்ஸ்டன்ட் பாப்சிகல்ஸ் இயந்திரம்’’ என்றவர் அது பற்றி குறிப்பிட்டார்.

‘‘இந்த பாப்சிகல்ஸ் இயந்திரம் ரொம்ப சிம்பிளானது. இன்ஸ்டன்டா வாடிக்கையாளர் கண் முன்னே தயாரித்து கொடுக்க முடியும். இது வைக்க ெபரிய இடம் தேவையில்லை. வாஷிங்மெஷின் வைக்கும் அளவுக்கு இடம் இருந்தாலே போதுமானது. சிறிய அளவில் கடை அமைத்து அங்கு இன்ஸ்டன்டாக தயாரித்து விற்பனை செய்யலாம். அந்த அடிப்படையில் தான் நாங்க இந்த இயந்திரத்தை விற்பனைக்காக அறிமுகம் செய்தோம். மேலும் இதை பயன்படுத்துவதும் சுலபம். உதாரணத்திற்கு ஸ்ட்ராபெர்ரி பாப்சிகல்ஸ் செய்ய, ஸ்ட்ரா

பெர்ரியை கூழாக்கி பால் மற்றும் சர்க்கரையுடன் சேர்த்து மோல்டில் ஊற்றி இயந்திரத்தில் வைத்தால், பத்தே நிமிடத்தில் ரெடி.

குறிப்பாக பெண்களால் இதனை சுலபமாக கையாள முடியும். ஸ்ட்ராபெர்ரி மட்டுமில்லாமல் திராட்சை, ஆரஞ்ச், ஆப்பிள், லிச்சி என அனைத்து பழங்களிலும் செய்யலாம்’’ என்றவர் பிரான்சைஸ் முறை மூலமாக பல கிளைகளை துவங்கியுள்ளார். ‘‘ஆரம்பத்தில் இயந்திரம் மட்டுமே விற்பனை செய்ய நினைத்தோம். ஆனால், வாடிக்கையாளர்களுக்கு இயந்திரம் இயக்குவது எளிதாக இருந்தாலும், பாப்சிகல்ஸ் செய்முறை குறித்து நிறைய சந்தேகங்கள் எழுந்தது. அதனால் இயந்திரத்துடன் பாப்சிகல்ஸும் சேர்ந்து பிரான்சைஸ் முறையில் கொடுக்க முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் ‘நேச்சுரோல்ஸ்’ என்ற எங்க பிராண்டினை 2023ல் ஆரம்பித்தோம்.

பாப்சிகல்ஸ் பழங்களை பொருத்து அதன் செயல்முறை மாறுபடும். திராட்சை, ஆரஞ்சு என புளிப்புத் தன்மை கொண்ட பழங்களுக்கு பால் சேர்க்கக் கூடாது. பழங்களின் சாற்றுடன் தண்ணீர் அல்லது இளநீர் சேர்க்கலாம். மேலும் ஒரு பாப்சிகல்ஸ் செய்ய பழங்கள், தண்ணீர், பால், சர்க்கரைக்கு என தனிப்பட்ட அளவுண்டு. அவை அனைத்தும் பிரான்சைசி பெறுபவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியும் அளிக்கிறோம். அப்போதுதான் அனைத்து கிளைகளிலும் ஒரே சுவையினை கொடுக்க முடியும்’’ என்றவர், தமிழ்நாடு மட்டுமில்லாமல் புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா போன்ற இடங்களில் 40க்கும் மேற்பட்ட கிளைகளை பிரான்சைசி முறையில் நடத்தி வருகிறார்.

‘‘பிரான்சைசி பொறுத்தவரை இடம் மற்றும் அங்கு இயந்திரம் அமைப்பது முதல், தயாரிக்கும் முறை, மெனு கார்ட், நேம் போர்ட், டெலிவரிக்கான பேக்கிங் என அனைத்தும் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கிறோம். அதன் பிறகு கடையும் நாங்களே அமைத்தும் தருகிறோம். இது முழுக்க முழுக்க பெண்களுக்கான பிசினஸ் என்பதால், மத்திய அரசு பெண் தொழில்முனைவோருக்கான திட்டத்தின் கீழ் கடன் வசதியினை பெற்றுத் தருகிறோம். அதன் மூலம் மானியம் கிடைக்கும், வட்டியும் குறைவு. மேலும், இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் அதற்கான சர்வீஸும் நாங்களே செய்து தருகிறோம்.

முழுக்க முழுக்க பழச்சாறுகள் மற்றும் பழக்கூழ் கொண்டு மட்டுமே தயாரிப்பதால், சாப்பிடும் ேபாது பழத்தின் சுவையினை உணர முடியும். எந்தவித நிறங்கள் மற்றும் ரசாயனங்கள் சேர்ப்பதில்லை. எங்களின் பாப்சிகல்ஸில் பால் சேர்க்கப்பட்டால், இரண்டு நாள் வரை நன்றாக இருக்கும். அதுவே பழச்சாறு மட்டுமே சேர்த்திருந்தால், ஐந்து நாட்கள் வரை ெகடாது. பழங்கள் மட்டுமில்லாமல் மில்லட்ஸ், சங்குப்பூ, ABC போன்ற ஃபிளேவர்களிலும் பாப்சிகல்ஸ் தயாரிக்கிறோம். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸும் செய்து தருகிறோம்.

நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு சர்க்கரை சேர்ப்பதில்லை. சிலர் நாட்டுச்சர்க்கரை, தேன் விரும்புவார்கள். வாடிக்கையாளர் கண் முன் தயாரித்து தருவதால், பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். தற்போது பாப்சிகல்ஸ் மற்றும் குல்ஃபி மட்டும்தான் இங்கு விற்பனை செய்கிறோம். வரும் காலத்தில் ஜெலாட்டோ ஐஸ்கிரீம்களும் அறிமுகம் செய்ய இருக்கிறோம். அதற்கான இயந்திர தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

நாங்க இந்த பிசினஸில் சந்தித்த முக்கிய பிரச்னையே இயந்திர தயாரிப்பில்தான். ஒரே இயந்திரத்தை பலமுறை தயாரித்திருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் ஐஸாக மாற்றாது. சில சமயம் சரியாக இயங்காது. அடுத்து பழங்கள். சில சமயம் காயாக இருக்கும். அது சரியான சுவையினை கொடுக்காது. கனிந்து இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு மாம்பழத்தில் எட்டு பாப்சிகல்ஸ் தயாரிக்கலாம். சில பழங்கள் குறிப்பிட்ட சீசனில் கிடைக்கும். அடுத்து முக்கியமானது பிரான்சைசி கொடுக்கும் போது அவர்களால் இதை சரியாக செய்ய முடியுமான்னு பார்க்க வேண்டும்’’ என்றவர், வரும் மாதங்களில் பயிற்சி மையம் ஒன்றையும் ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்தார்.

‘‘தற்போது பாப்சிகல்ஸ் மட்டுமில்லாமல் கஃபே முறையில் கடையினை திறக்க பலர் விரும்புகிறார்கள். அதே ேபால் தங்களின் சொந்த பிராண்ட் ஆரம்பிக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு பாப்சிகல்ஸ் மட்டுமில்லாமல் ஒரு கஃபேயில் உள்ள மில்க்ஷேக், பீட்சா, பர்கர் போன்ற மற்ற உணவு குறித்த பயிற்சியும் அளிக்க இருக்கிறோம்’’ என்றார் இலக்கியா.

ஷம்ரிதி