Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடி மாத விழாக்களும் அதன் மகத்துவங்களும்!

நன்றி குங்குமம் தோழி

ஆடி மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் விழா எடுத்து சிறப்பாக பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். பண்டிகைகளின் தொடக்கத்தினை ஆடி மாதத்தில் இருந்து தான் கணக்கிடுவார்கள்.

*ஆடி மாதத்தை ‘பீடை மாதம்’ என்று ஒதுக்குவது அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில் ‘பீட மாதம்’ என்றுதான் பெயர். அதாவது, மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபட வேண்டிய மாதம் என்பதே அதன் பொருள்.

*ஆடி மாதம் பிறந்தது முதல் மார்கழி வரை தட்சணாயன புண்ணிய காலம். புனித நதிகளில் நீராடினால் பாவங்கள் நீங்கும்.

*ஆடி மாதம் செவ்வாய், வெள்ளியில் காமாட்சியை வணங்கினால் திருமணத் தடைகள் விலகி திருமணம் நடக்கும்.

*ஆடி செவ்வாயில் எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். மாதம் முழுதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும். ஆடி வெள்ளியில் மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வமும் சேரும்.

*ஆடி சுக்லபட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

*ஆடி ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

*கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை ஊரில் முருகனுக்கு ஆடி மாதம் கடைசி வெள்ளியில் கூடை கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதனை மலர் முழுக்கு என்று சொல்வார்கள்.

*ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

*ஆடி பெளர்ணமி நாளில் ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்தால், மனம் குளிர்ந்து மழை பொழியச் செய்வார் என்பது ஐதீகம்.

தொகுப்பு: எஸ்.மாரிமுத்து, சென்னை.