நன்றி குங்குமம் தோழி
உங்க பொண்ண சர்வதேச டென்னிஸ் வீராங்கனையா மாற்ற 15 கோடி ரூபாய் செலவாகும்னு சொன்னா ஒரு அப்பா என்ன பண்ணுவார்? முக்கால்வாசிப் பேர் அந்தத் தொகைய கேட்டதுமே, ‘அய்யய்யோ... இது நமக்கு செட்டாகாது’ன்னு, அந்த எண்ணத்தையே கை விட்டுருவாங்க. ஆனால், அந்த மலையளவு தொகையை பார்த்து கொஞ்சமும் மலைத்துப் போகாத ஒரு சாதாரண அப்பா மற்றும் அவரின் மகளோட விளையாட்டுப் பயணமே இது.
நீச்சல் விளையாட்டில் தன் பயணத்தை தொடங்கி எதிர்பாராமல் டென்னிஸ் கோர்ட்டுக்கு மாறிய ஒரு இளம் வீராங்கனையின் கதை இது. இது வெறும் டென்னிஸ் விளையாட்டு குறித்த
கதையல்ல... ஒரு சாதாரண பின்னணி உள்ள குடும்பம், தங்களிடம் இருக்கிற மிகக் குறைவான வளங்களை பயன்படுத்தி, சர்வதேச அளவில் மாபெரும் பாய்ச்சலை எப்படி நிகழ்த்த முடியும் என்கிற மாஸ்டர் கிளாஸ்.ஆம்! எந்த ஒரு பெரிய இலக்கை அடையறதுக்கும் பணம் மட்டுமே முக்கியம் இல்ல. சரியான வியூகமும், திட்டமிடலும் இருந்தாலே போதும் என்கிறது இவர்களின் வாழ்க்கை. இரண்டு வயது குழந்தைக்கு, தண்ணிய பார்த்தாலே பயம் இருக்கும். ஆனால், சிறுமி பானுவுக்கு ஒருநாள் நீச்சலுக்கு போகலைன்னாலும் அழுகின்ற அளவுக்கு நீச்சலில் தீவிரம் இருந்திருக்கு.
அவரின் மூன்றரை வயதில் 5 வயசு குழந்தைகளுக்கான 25 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் மாநில அளவிலான முதல் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். தன் 16 வயதுக்குள் அஞ்சு தங்கப் பதக்கங்களை வென்று ஸ்டேட் சாம்பியனும் ஆனார். இது மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் பல்வேறு போட்டிகளில் விளையாடியவர், சிங்கப்பூரில் நடந்த 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் போட்டியில் வெண்கலம் வென்று கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை அடுத்தடுத்த நீச்சல் போட்டிகளில் குவிச்சிருக்கிறார்.
பானு சிறப்பாய் செய்வதாக பலரும் சொன்னாலும், பானுவின் அப்பா அஸ்வினுக்கு மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அதாவது, இந்திய நீச்சல் வீரர்கள் உள்ளூர்ல இவ்வளவு சாதிக்கிறாங்க. ஆனால், ஏன் ஒலிம்பிக் மாதிரியான மிகப்பெரிய சர்வதேச போட்டிகளில் இவர்களால் வெற்றிக் கோட்டைத் தொட முடியலை என்பதே அது.அப்போது தாய்லாந்தில், அமெரிக்க மகளிர் நீச்சல் அணி பயிற்சியாளர் ஒருவரை சந்தித்த போது... “இந்திய நீச்சல் வீரர்கள், சிறு வயதிலேயே அதிக நேரம் பயிற்சி செய்து, 15 வயதுக்குள் மனதளவிலும், உடல் அளவிலும் ரொம்பவே சோர்வடைந்து, பிறகு விளையாட்டையே விட்டுவிடுகிறார்கள். இதைத் தவிர்க்க நீச்சலைக் குறைத்து, ஹாக்கி, கால்பந்து மாதிரியான வேறொரு விளையாட்டை இணையாகப் பழக” அறிவுறுத்தியதுடன், சர்வதேச அளவில் பல முன்னணி வீராங்கனைகள் சிறு வயதில் இரண்டு அல்லது மூணு விளையாட்டுகளை இணையா விளையாடு வார்கள். இதுக்குப் பேரு பேரலல் ஸ்போர்ட்ஸ் என்றும் குறிப்பிடுகிறார்.
இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காலகட்டம் எல்லோருக்குமே சவாலாக அமைய, நீச்சல் குளங்கள் மூடப்படுகிறது. பயிற்சி இல்லாததால், பானுவின் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்கிறது. பிட்னஸுக்காக வீட்டின் அருகில், டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார் பானு. அப்போது அவருக்கு 9 வயது. தாமதமாக டென்னிஸ் விளையாட்டுக்குள் வந்தாலும், மிக விரைவில் சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கான சவுத் ஜோன் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெல்கிறார்.
அடுத்து ஆல் இந்தியா டென்னிஸ் அசோசியேஷன் (AITA) நடத்துகிற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், சிங்கிள்ஸ் பிரிவில் தங்கமும், டபுள்ஸ் பிரிவில் ரன்னர் அப்பும் வாங்குகிறார். பிறகு ஜப்பான் நாட்டில் நடந்த விம்பிள்டன் தகுதிச்சுற்று போட்டியில் காலிறுதி வரை முன்னேறுகிறார். பிறகு கென்யா நாட்டிலும், சமீபத்தில் ஜூன் 7ம் தேதி சிங்கப்பூரில் நடந்த தொடரிலும் பங்கேற்று தங்கப் பதக்கமும் வென்றிருக்கிறார்.இதுவரை பங்கேற்ற டென்னிஸ் விளையாட்டுகளில் 15க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றிருக்கிறார் பானு. இதில் பானுவின் மனவலிமை அபாரமானதுதான். என்றாலும், இந்த வெற்றியை சாத்தியப்படுத்த, விளையாட்டு மைதானத்திற்கு வெளியே அவரின் தந்தை ‘தங்கல்’ ஹிந்தி பட பாணியில், ஆடிய ஆட்டமும் வியக்க வைக்கிற ஒன்று.
ஆம், முன்பே குறிப்பிட்டது போல், சர்வதேச அளவுகளில் ஒருவரை டென்னிஸ் விளையாட வைக்க தோராயமாக கோடிகளில் பணம் தேவை. இது சாதாரண நடுத்தர குடும்பத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. இதற்காக, தங்களின் பயணச் செலவை குறைக்க, முதலில் சிங்கப்பூரில் உள்ள தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கி, உணவு, தங்குமிடச் செலவுகளை மிச்சப்படுத்தியதுடன், தொடர்ந்து அருகாமையில் உள்ள மலேசியா, தாய்லாந்து நாடுகளுக்கும் பயணித்து வருடம் இரண்டு மற்றும் மூன்று சர்வதேச தொடர்களில் முதலில் பங்கேற்றுள்ளனர்.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பிறகே, நண்பர்கள் உதவியில் ஜப்பான் நாட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றில் க்ராஸ் கோர்ட்டில்(Grass Court) குவாட்டர் பைனல் வரை முன்னேறியுள்ளார்.அஸ்வின் உடன்பிறந்த அண்ணன், யுரோப் நாட்டின் செக் ரிபப்ளிக்கில் வசிப்பதால், அவர் உதவியில் அங்கு சென்று, ஜெர்மன் மற்றும் ஆஸ்திரியாவில் நிகழ்ந்த அயர்ன் கிட்ஸ் (IRON KIDS) போட்டிகளில் பங்கேற்றதில் 4 வெண்கலப் பதக்கங்கள் பானுவுக்கு கிடைத்தது.
விளையாட்டுத் துறையில வெற்றி என்பது 100 சதவிகிதமும் உத்தரவாதம் கிடையாது. எதிர்பாராத காயங்கள் ஏற்படலாம் அல்லது வேறு பல காரணங்களால் போட்டிகளில் தொடர முடியாமலும் போகலாம். அந்த மாதிரியான நேரங்களில், ஒரு வலுவான கல்வி பின்னணி இருப்பதே விளையாட்டு வீரர்களை காப்பாற்றும் என்பதை புரிந்த பானு, 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்ஸி தேர்வில் 82% மதிப்பெண்களுடன், ஸ்போர்ட்ஸ் ஸ்காலர்ஷிப் பெற்று, 11 ஆம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை எடுத்து படித்து வருகிறார்.
அரசாங்கத்திடம் உள்ள கட்டமைப்புகளை, குறிப்பாக நுங்கம்பாக்கம் ஸ்டேடியம் மாதிரியான உலகத்தரம் வாய்ந்த இடங்களை பானுவின் பயிற்சிக்காக சரியாக பயன்படுத்தி, தன்னால் முடிந்த வழிகளில் முயற்சித்ததுடன், தனது மகள் பானுவிற்காக, தான் பார்த்து வந்த, மீடியா வேலையை உதறிவிட்டு, யோகா டூரிசம் என்கிற புதிய தொழிலையும் தொடங்கியிருக்கிறார் அஸ்வின்.
யோகா டூரிசம் என்பது செக்குடியரசு நாட்டைச் சேர்ந்தவர்களை, அந்தமான் மற்றும் லடாக் பகுதிகளுக்கு வருடத்தில் 15 நாட்கள் அழைத்து வருகிற வேலை.
செக்குடியரசு டென்னிஸ் விளையாட்டில் மிகப்பெரிய ஜாம்பவான் நாடு. விம்பிள்டன் மாதிரியான பெரிய தொடர்களில் அந்த நாட்டு வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்துவார்கள். தனது யோகா டூரிசம் மூலம், அந்த நாட்டு மக்களின் தொடர்பை ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் தன் மகளை அங்கு அழைத்துச் சென்று, பயிற்சி கொடுக்க வசதியாக இருக்கும் என்கிற நீண்டகாலத் திட்டமும் இதில் இருப்பதாகச் சொல்கிறார் அஸ்வின்.‘‘அவளுக்கு தேவையான புரோட்டீன் உணவுகளை நானே தினமும் தயாரித்து தருகிறேன். காலையில பானுவின் பிட்னஸ் பயிற்சி. அப்புறம் டென்னிஸ். அதன்பிறகு பள்ளி. மீண்டும் மாலையில் டென்னிஸ் பயிற்சி என பானுவை மேலே ஏற்றுகிற ஏணியாய் அவள் பின்னாடியே நான் இருக்கிறேன். வாரத்தின் 7 நாளும் இப்படித்தான் போகுது. எங்களுக்கு விடுமுறையே இல்லை.
எங்களின் பொருளாதார தேவையை தாங்கிப் பிடிப்பது என் மனைவி. அவர் ஐடி துறையில் பணியில் இருக்கிறார். ஒரு சர்வதேச வீராங்கனையை உருவாக்குவது, ஒரு தனி மனிதனோட உழைப்பு மட்டுமல்ல... ஒட்டுமொத்த குடும்பத்தின் கூட்டு பலிதானம் இது. நம்மிடம் கோடிக்கணக்குல பணம் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், மாற்று திட்டங்கள் அதாவது, பிளான் B வச்சிக்கிறதும், நம்மைச் சுற்றி இருக்கிற வளங்களை எவ்வளவு புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம்.
அதைவிட முக்கியம் பர்ன் அவுட்டை அடையாளம் கண்டு சரியான நேரத்தில் திசை மாற்றுதலே உங்கள் வெற்றியை தீர்மானிக்கும்’’ என்கிறார் அஸ்வின். தன் மகளை சர்வதேச விளையாட்டு வீராங்கனையாக மாற்றிய அனுபவத்தோடு.உங்க பொண்ண சர்வதேச டென்னிஸ் வீராங்கனையா மாற்ற 15 கோடி ரூபாய் செலவாகும்னு சொன்னா ஒரு அப்பா என்ன பண்ணுவார்? முக்கால்வாசிப் பேர் அந்தத் தொகைய கேட்டதுமே, ‘அய்யய்யோ... இது நமக்கு செட்டாகாது’ன்னு, அந்த எண்ணத்தையே கை விட்டுருவாங்க. ஆனால், அந்த மலையளவு தொகையை பார்த்து கொஞ்சமும் மலைத்துப் போகாத ஒரு சாதாரண அப்பா மற்றும் அவரின் மகளோட விளையாட்டுப் பயணமே இது.
நீச்சல் விளையாட்டில் தன் பயணத்தை தொடங்கி எதிர்பாராமல் டென்னிஸ் கோர்ட்டுக்கு மாறிய ஒரு இளம் வீராங்கனையின் கதை இது. இது வெறும் டென்னிஸ் விளையாட்டு குறித்த
கதையல்ல... ஒரு சாதாரண பின்னணி உள்ள குடும்பம், தங்களிடம் இருக்கிற மிகக் குறைவான வளங்களை பயன்படுத்தி, சர்வதேச அளவில் மாபெரும் பாய்ச்சலை எப்படி நிகழ்த்த முடியும் என்கிற மாஸ்டர் கிளாஸ்.ஆம்! எந்த ஒரு பெரிய இலக்கை அடையறதுக்கும் பணம் மட்டுமே முக்கியம் இல்ல. சரியான வியூகமும், திட்டமிடலும் இருந்தாலே போதும் என்கிறது இவர்களின் வாழ்க்கை. இரண்டு வயது குழந்தைக்கு, தண்ணிய பார்த்தாலே பயம் இருக்கும். ஆனால், சிறுமி பானுவுக்கு ஒருநாள் நீச்சலுக்கு போகலைன்னாலும் அழுகின்ற அளவுக்கு நீச்சலில் தீவிரம் இருந்திருக்கு.
அவரின் மூன்றரை வயதில் 5 வயசு குழந்தைகளுக்கான 25 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் மாநில அளவிலான முதல் வெண்கலப்பதக்கத்தை வென்றிருக்கிறார். தன் 16 வயதுக்குள் அஞ்சு தங்கப் பதக்கங்களை வென்று ஸ்டேட் சாம்பியனும் ஆனார். இது மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் பல்வேறு போட்டிகளில் விளையாடியவர், சிங்கப்பூரில் நடந்த 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் போட்டியில் வெண்கலம் வென்று கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை அடுத்தடுத்த நீச்சல் போட்டிகளில் குவிச்சிருக்கிறார்.
பானு சிறப்பாய் செய்வதாக பலரும் சொன்னாலும், பானுவின் அப்பா அஸ்வினுக்கு மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அதாவது, இந்திய நீச்சல் வீரர்கள் உள்ளூர்ல இவ்வளவு சாதிக்கிறாங்க. ஆனால், ஏன் ஒலிம்பிக் மாதிரியான மிகப்பெரிய சர்வதேச போட்டிகளில் இவர்களால் வெற்றிக் கோட்டைத் தொட முடியலை என்பதே அது.
அப்போது தாய்லாந்தில், அமெரிக்க மகளிர் நீச்சல் அணி பயிற்சியாளர் ஒருவரை சந்தித்த போது... “இந்திய நீச்சல் வீரர்கள், சிறு வயதிலேயே அதிக நேரம் பயிற்சி செய்து, 15 வயதுக்குள் மனதளவிலும், உடல் அளவிலும் ரொம்பவே சோர்வடைந்து, பிறகு விளையாட்டையே விட்டுவிடுகிறார்கள். இதைத் தவிர்க்க நீச்சலைக் குறைத்து, ஹாக்கி, கால்பந்து மாதிரியான வேறொரு விளையாட்டை இணையாகப் பழக” அறிவுறுத்தியதுடன், சர்வதேச அளவில் பல முன்னணி வீராங்கனைகள் சிறு வயதில் இரண்டு அல்லது மூணு விளையாட்டுகளை இணையா விளையாடு வார்கள். இதுக்குப் பேரு பேரலல் ஸ்போர்ட்ஸ் என்றும் குறிப்பிடுகிறார்.
இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காலகட்டம் எல்லோருக்குமே சவாலாக அமைய, நீச்சல் குளங்கள் மூடப்படுகிறது. பயிற்சி இல்லாததால், பானுவின் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்கிறது. பிட்னஸுக்காக வீட்டின் அருகில், டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார் பானு. அப்போது அவருக்கு 9 வயது. தாமதமாக டென்னிஸ் விளையாட்டுக்குள் வந்தாலும், மிக விரைவில் சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கான சவுத் ஜோன் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெல்கிறார்.
அடுத்து ஆல் இந்தியா டென்னிஸ் அசோசியேஷன் (AITA) நடத்துகிற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், சிங்கிள்ஸ் பிரிவில் தங்கமும், டபுள்ஸ் பிரிவில் ரன்னர் அப்பும் வாங்குகிறார். பிறகு ஜப்பான் நாட்டில் நடந்த விம்பிள்டன் தகுதிச்சுற்று போட்டியில் காலிறுதி வரை முன்னேறுகிறார். பிறகு கென்யா நாட்டிலும், சமீபத்தில் ஜூன் 7ம் தேதி சிங்கப்பூரில் நடந்த தொடரிலும் பங்கேற்று தங்கப் பதக்கமும் வென்றிருக்கிறார்.
இதுவரை பங்கேற்ற டென்னிஸ் விளையாட்டுகளில் 15க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றிருக்கிறார் பானு. இதில் பானுவின் மனவலிமை அபாரமானதுதான். என்றாலும், இந்த வெற்றியை
சாத்தியப்படுத்த, விளையாட்டு மைதானத்திற்கு வெளியே அவரின் தந்தை ‘தங்கல்’ ஹிந்தி பட பாணியில், ஆடிய ஆட்டமும் வியக்க வைக்கிற ஒன்று.
ஆம், முன்பே குறிப்பிட்டது போல், சர்வதேச அளவுகளில் ஒருவரை டென்னிஸ் விளையாட வைக்க தோராயமாக கோடிகளில் பணம் தேவை. இது சாதாரண நடுத்தர குடும்பத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. இதற்காக, தங்களின் பயணச் செலவை குறைக்க, முதலில் சிங்கப்பூரில் உள்ள தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கி, உணவு, தங்குமிடச் செலவுகளை மிச்சப்படுத்தியதுடன், தொடர்ந்து அருகாமையில் உள்ள மலேசியா, தாய்லாந்து நாடுகளுக்கும் பயணித்து வருடம் இரண்டு மற்றும் மூன்று சர்வதேச தொடர்களில் முதலில் பங்கேற்றுள்ளனர்.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பிறகே, நண்பர்கள் உதவியில் ஜப்பான் நாட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றில் க்ராஸ் கோர்ட்டில்(Grass Court) குவாட்டர் பைனல் வரை முன்னேறியுள்ளார்.அஸ்வின் உடன்பிறந்த அண்ணன், யுரோப் நாட்டின் செக் ரிபப்ளிக்கில் வசிப்பதால், அவர் உதவியில் அங்கு சென்று, ஜெர்மன் மற்றும் ஆஸ்திரியாவில் நிகழ்ந்த அயர்ன் கிட்ஸ் (IRON KIDS) போட்டிகளில் பங்கேற்றதில் 4 வெண்கலப் பதக்கங்கள் பானுவுக்கு கிடைத்தது.
விளையாட்டுத் துறையில வெற்றி என்பது 100 சதவிகிதமும் உத்தரவாதம் கிடையாது. எதிர்பாராத காயங்கள் ஏற்படலாம் அல்லது வேறு பல காரணங்களால் போட்டிகளில் தொடர முடியாமலும் போகலாம். அந்த மாதிரியான நேரங்களில், ஒரு வலுவான கல்வி பின்னணி இருப்பதே விளையாட்டு வீரர்களை காப்பாற்றும் என்பதை புரிந்த பானு, 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்ஸி தேர்வில் 82% மதிப்பெண்களுடன், ஸ்போர்ட்ஸ் ஸ்காலர்ஷிப் பெற்று, 11 ஆம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை எடுத்து படித்து வருகிறார்.
அரசாங்கத்திடம் உள்ள கட்டமைப்புகளை, குறிப்பாக நுங்கம்பாக்கம் ஸ்டேடியம் மாதிரியான உலகத்தரம் வாய்ந்த இடங்களை பானுவின் பயிற்சிக்காக சரியாக பயன்படுத்தி, தன்னால் முடிந்த வழிகளில் முயற்சித்ததுடன், தனது மகள் பானுவிற்காக, தான் பார்த்து வந்த, மீடியா வேலையை உதறிவிட்டு, யோகா டூரிசம் என்கிற புதிய தொழிலையும் தொடங்கியிருக்கிறார் அஸ்வின்.
யோகா டூரிசம் என்பது செக்குடியரசு நாட்டைச் சேர்ந்தவர்களை, அந்தமான் மற்றும் லடாக் பகுதிகளுக்கு வருடத்தில் 15 நாட்கள் அழைத்து வருகிற வேலை. செக்குடியரசு டென்னிஸ் விளையாட்டில் மிகப்பெரிய ஜாம்பவான் நாடு. விம்பிள்டன் மாதிரியான பெரிய தொடர்களில் அந்த நாட்டு வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்துவார்கள். தனது யோகா டூரிசம் மூலம், அந்த நாட்டு மக்களின் தொடர்பை ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் தன் மகளை அங்கு அழைத்துச் சென்று, பயிற்சி கொடுக்க வசதியாக இருக்கும் என்கிற நீண்டகாலத் திட்டமும் இதில் இருப்பதாகச் சொல்கிறார் அஸ்வின்.
‘‘அவளுக்கு தேவையான புரோட்டீன் உணவுகளை நானே தினமும் தயாரித்து தருகிறேன். காலையில பானுவின் பிட்னஸ் பயிற்சி. அப்புறம் டென்னிஸ். அதன்பிறகு பள்ளி. மீண்டும் மாலையில் டென்னிஸ் பயிற்சி என பானுவை மேலே ஏற்றுகிற ஏணியாய் அவள் பின்னாடியே நான் இருக்கிறேன். வாரத்தின் 7 நாளும் இப்படித்தான் போகுது. எங்களுக்கு விடுமுறையே இல்லை.எங்களின் பொருளாதார தேவையை தாங்கிப் பிடிப்பது என் மனைவி. அவர் ஐடி துறையில் பணியில் இருக்கிறார். ஒரு சர்வதேச வீராங்கனையை உருவாக்குவது, ஒரு தனி மனிதனோட உழைப்பு மட்டுமல்ல... ஒட்டுமொத்த குடும்பத்தின் கூட்டு பலிதானம் இது.
நம்மிடம் கோடிக்கணக்குல பணம் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், மாற்று திட்டங்கள் அதாவது, பிளான் B வச்சிக்கிறதும், நம்மைச் சுற்றி இருக்கிற வளங்களை எவ்வளவு புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். அதைவிட முக்கியம் பர்ன் அவுட்டை அடையாளம் கண்டு சரியான நேரத்தில் திசை மாற்றுதலே உங்கள் வெற்றியை தீர்மானிக்கும்’’ என்கிறார் அஸ்வின். தன் மகளை சர்வதேச விளையாட்டு வீராங்கனையாக மாற்றிய அனுபவத்தோடு.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்