Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாதம் வடித்த கஞ்சியின் நன்மைகள்!

நன்றி குங்குமம் தோழி

சாதம் வடித்த கஞ்சி முகத்திற்கும், முடிக்கும் மிகுந்த நன்மை அளிக்கும். தினசரி இதனை முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை மறையத் தொடங்கும்.சாதம் வடித்த கஞ்சியில் பி காம்ப்ளக்ஸ், அமினோ ஆசிட்ஸ், வைட்டமின் பி1, பி2 போன்றவை அதிகமாக உள்ளது.சாதம் வடித்த கஞ்சியில் 2 டீஸ்பூன் தேன், 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து ஈரத் துணி கொண்டு துடைத்து எடுத்தால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.

சாதம் வடித்த கஞ்சியை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்துக் கழுவினால் எண்ணெய் பசையை நீக்கி சருமத் துளைகளை சுருக்கி முகப்பரு வராமல் தடுக்கிறது.இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, முதிர்ச்சியை தடுத்து, இளமையான தோற்றத்தைத் தருகிறது.சாதம் வடித்த கஞ்சியை ஆற வைத்து, காட்டன் பஞ்சு கொண்டு முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் பொலிவு பெறும்.

சாதம் வடித்த கஞ்சியுடன் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் மாஸ்க் போல போட்டு 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். சாதம் வடித்த கஞ்சியில் சீயக்காய் தூள் கலந்து தேய்த்து தலைக்கு குளித்தால் தலைமுடி பளபளப்பாகும்.

தொகுப்பு: எஸ்.மாரிமுத்து, சென்னை