Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

வீட்டிற்குள் செடி வைப்பதால் ஏற்படும் நன்மைகள்!

நன்றி குங்குமம் தோழி

அப்பார்ட்மென்டில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் தொட்டிகளில் செடிகள் வளர்க்கலாம். இவற்றுக்கான பராமரிப்பு மிகவும் குறைவு. தொட்டியில் இருக்கும் மண் காய்ந்த பிறகு தண்ணீர் ஊற்றினால் போதும். லேசான சூரிய வெளிச்சமே இதற்கு போதுமானது.

* வீட்டிற்குள் பச்சை நிறச் செடிகளை அடிக்கடி பார்ப்பதும், அவற்றைப் பராமரிப்பதும் மன அமைதியை தந்து, பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் கணிசமாகக் குறைக்கிறது.

* வீட்டிற்குள் இருக்கும் நச்சு வாயுக்களை உறிஞ்சி, காற்றை இயற்கையாகவே சுத்திகரிக்கின்றன. கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி மனிதர்களுக்குத் தேவையான புதிய ஆக்சிஜனை வெளிப்படுத்துகின்றன.

* பாம்புச் செடி, கற்றாழை போன்ற செடிகளை படுக்கையறையில் வைத்தால் இரவிலும் ஆக்சிஜனை வெளிப்படுத்தும், நன்றாக தூக்கம் வரும்.

* குழந்தைகள் படிக்கும் அறையிலோ அல்லது மேஜையிலோ செடிகளை வைத்தால், அவர்களின் கவனச் சிதறலை குறைத்து, நினைவாற்றலை அதிகரிக்கும்.

* வீட்டின் உட்புற அலங்காரத்திற்கு இவை இயற்கை எழிலையும், அழகியல் உணர்வையும் தருகின்றன.

* அடைபட்ட அறைக்குள் இருக்கும்போது ஏற்படும் தலைவலி, மனச்சோர்வு மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் குறையும்.

* நகர வாழ்க்கையில் இயற்கையோடு இணைந்திருக்கும் ஒரு பசுமையான சூழலையும் புத்துணர்ச்சியையும் தரும்.

* பாம்புச் செடி: மிகக் குறைந்த பராமரிப்பு. குறைந்த வெளிச்சத்திலும் வளரும். இரவிலும் ஆக்சிஜனை வெளிப்படுத்தும் என்பதால் படுக்கையறைக்கு மிகவும் ஏற்றது.

* மணிபிளான்ட்: பாட்டிலில் அல்லது தொட்டியில் எளிதாக வளர்க்கலாம். வீட்டின் நச்சு வாயுக்களை சுத்திகரிக்கும்.

* ஸாமிஸோகுல்காஸ்: அடிக்கடி தண்ணீர் ஊற்ற தேவையில்லை. வெளிச்சம் குறைவாக உள்ள அறைகளுக்கும், அலுவலக மேஜைகளுக்கும் சிறந்தது.

* அரேகா பாம்: வீட்டின் மூலைகளில் வைக்க ஏதுவான பெரிய செடி. காற்றை சுத்திகரிப்பதுடன் வீட்டிற்குள் இயற்கை அழகைக் கூட்டும்.

* ஸ்பைடர் பிளான்ட்: காற்றின் ஈரப்பதத்தைச் சீராக வைக்க உதவும்.

* கற்றாழை: சமையலறை அல்லது ஜன்னல் அருகில் வைக்கலாம்.

* பீஸ் லிலி: அழகான வெள்ளை நிறப் பூக்களைத் தரும். நிழலான இடங்களில் நன்கு வளரும்.

இந்தச் செடிகளுக்கு தொட்டியில் மண் காய்ந்த பிறகு மட்டுமே தண்ணீர் ஊற்ற வேண்டும். வாரம் ஒருமுறை லேசான சூரிய ஒளி படுமாறு ஜன்னல் அருகில் வைக்கலாம்.

தொகுப்பு: எஸ்.விஜயலட்சுமி, ஈரோடு