Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஐ-ப்ரோ த்ரெட்டிங் செய்ய சில டிப்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக கூந்தலுக்கு அடுத்தபடியாக பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவது புருவங்களின் மீதுதான். ஐ-ப்ரோ த்ரெட்டிங்காக மட்டுமே பியூட்டி பார்லர் செல்லும் பெண்கள் பலர் உண்டு. இதற்கு டீன் ஏஜ், மிடில் ஏஜ், ஓல்டு ஏஜ் என்ற விதிவிலக்கெல்லாம் இல்லை. த்ரெட்டிங் தொடர்பான சில டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம்.

புருவங்களை த்ரெட்டிங் செய்யும்போது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, டீன் ஏஜ் பெண்கள் அந்த வயதில், இயற்கைக்கு முரணாக செய்யும் மாற்றங்கள், வேறுவிதமான சிக்கல்களுக்கு நிரந்தர விதை போட்டுவிடும். உதாரணமாக, ஒரு தடவை த்ரெட்டிங் செய்தால், தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால்... புருவங்களிலிருக்கும் முடிகளுடைய வளர்ச்சி தாறுமாறாக மாறி, முக அழகையே கெடுத்துவிடும். மழிக்கப்பட்ட இடங்களில் முடிக்கால்கள் தோன்றி... முகத்தையே விகாரமாகக் காட்டி பயமுறுத்தும்.

அதுபோன்று, த்ரெட்டிங் செய்ய போகும் முன்பு கண்களைச் சுற்றி எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு எண்ணெயை கழுவிவிட்டு, த்ரெட்டிங் செய்தால், புருவம் மென்மையாகவும் வில் போன்று அழகான வடிவத்துக்கு மாறிவிடும்.

த்ரெட்டிங் செய்து கொள்ளும்போது தசையெல்லாம் சுருங்கக்கூடாது என்பதற்காக கண்களை கையால் அழுத்திக் கொண்டுதான் செய்வார்கள். முதன்முறையாக செய்து கொள்பவர்களுக்கு எரிச்சலுடன், வலியும், வீக்கமும் உண்டாகும். இந்த வீக்கம் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும். வீக்கத்தைப் போக்க, முதல் நாள் வைட்டமின்-ஈ ஆயில், மறுநாள் பாதாம் ஆயில், இன்னொரு நாள் வெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆயில் க்ரீம் என மாறி மாறி பூசினால் வீக்கம் மறைவதோடு, கண்களுக்கும் குளிர்ச்சி தரும்.

கூட்டுப் புருவ முடிகளை அகற்ற...சில பெண்களுக்கு இரு புருவத்துக்குமிடையே முடிகள் ஒன்று சேர்ந்து ஒட்டியிருக்கும். இதைத்தான் கூட்டுப் புருவம் என்று சொல்கின்றனர். இவர்களுக்கு பொட்டு வைத்தால்கூட அழகாகத் தெரியாது.

இந்தக் கூட்டுப் புருவ முடிகளை அகற்ற கஸ்தூரி மஞ்சள்தூள், கிழங்கு மஞ்சள்தூள், கடலை மாவு ஆகியவற்றை தலா ஒரு தேக்கரண்டி எடுத்து, பாலில் கலந்து குழைத்துத் கொண்டு மூக்கின் நுனிப் பகுதியில் இருந்து புருவம் வரை பூசி, அரை மணி நேரம் கழித்து மெல்லிய காட்டன் துணியால் ஒத்தி துடைத்து எடுக்கவேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது அந்த இடத்தில் முடிகள் உதிர்ந்து முகம் பளிச்சென தெரியும்.