நன்றி குங்குமம் தோழி
நம்ம ஊர்ல சாதாரணமாகப் புழங்குகிற வட்டார மொழி வசனம் அல்லது ஒரு ஒற்றை தமிழ் எழுத்தை, சரியான திட்டமிடலும் தரமும் இருந்தால், சர்வதேச ஃபேஷன் தரத்துக்கு உயர்த்த முடியும் என நிரூபித்து வருகிறார்கள் அருண் வெங்கடேஷ் மற்றும் ஸம்ரிதி இணையர்.ஆமாங்க, தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டுவந்து, ஒரு ஒற்றை தமிழ் எழுத்தை, லெவிஸ் மாதிரியான மிகப் பெரிய சர்வதேச ஃபேஷன் பிராண்டுகளுக்கு இணையாய் மாற்றத் துடிக்கிற அபாரமான பயணம் இவர்களுடையது.
எந்தவொரு தொழிலாக இருந்தாலும், ஆரம்பத்தில் பேப்பரில் எழுதி பிளான் செய்கிறபோது இருக்கும் எதிர்பார்ப்புகளுக்கும், களத்தில் இறங்கி வேலை செய்யும்போது வருகின்ற சவால்களுக்கும் இடையே, மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கும்.2014ல் பெங்களூருவில் உள்ள நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் மேனேஜ்மென்ட் முடித்த இளைஞராய் தன் மனைவி ஸம்ரிதியோடு இணைந்து, ஆங்கில வாசகங்கள் அடங்கிய டீஷர்ட் தொழிலைத் தொடங்கியவர்தான் அருண் வெங்கடேஷ்.அந்த நேரத்தில் இவர் உருவாக்கிய டீஷர்ட் தொழில் தோல்வியை சந்திக்க, சரி இத்துடன் தொழிலை இழுத்து மூடிவிடலாம் என விரக்தியில் இருந்த போது, தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்கிறார்கள் இவர்கள்.
அப்போது, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த குறிப்பிட்ட அந்தப் படத்தில் வருகிற, “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என்கிற வசனத்துக்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. இதைப் பார்த்ததுமே, அவர்களுக்குள் ஒரு சிறு பொறி தட்ட, இங்கிலீஷ் வாசகங்கள் அடங்கிய டீஷர்ட்டை தூக்கிப் போட்டுவிட்டு, சினிமாவில் வந்த, அந்த லோக்கல் வசனத்தை தங்கள் தயாரிப்பு டீஷர்ட்டில் பிரின்ட் செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
ஆம்! தியேட்டரில் கைத்தட்டல் பெற்ற அந்த வசனம்.. டீஷர்ட் சேல்ஸிலும் ஹிட் அடிக்க, அந்த நிமிடத்தில் இருந்தே இவர்களின் தொழில் தலைகீழாய் மாறுகிறது. தோல்வியின் விளிம்பில் நிற்கும்போது, மனித மூளை மாற்று வழிகளை எப்படியெல்லாம் தேடும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.சுருக்கமாய் சொன்னால், சதுரமான ஒரு கட்டையை எடுத்து உருண்டையான ஒரு ஓட்டைக்குள் பல மாசமாகத் திணிக்க முயற்சித்து, கடைசியாக தியேட்டர்ல உட்கார்ந்திருக்கும் போதுதான், நாம ஏன் சதுரமாவே ஒரு ஓட்டையை உருவாக்கக் கூடாதுன்னு தோணியிருக்கிறது இவர்களுக்கு.
இந்த இடத்தில் நாம் மனிதர்களோட எமோஷன்ஸையும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும். ஆடைகள் அப்படிங்கறது வெறும் துணிகள் கிடையாது. ஆடை என்பது நீங்க பேசாமலே உங்களுக்காக பேசுகிற ஒரு மொழி. அது மக்களோட அன்றாட அடையாளத்தோடு நேரடியாகக் கலந்த விஷயம். மக்கள் தங்களை எதோடு ரிலேட் செய்கிறார்களோ அதையே அணியவும் விரும்புவாங்க.
நம்ம ஊர் மக்களுக்கு சினிமாங்கறது வெறும் எண்டர்டைன்மென்ட் கிடையாது. அது அவங்க வாழ்க்கையின் ஒரு அங்கம். இங்கிலீஷ் கோட்ஸ் போட்ட டீஷர்ட்டுகள் அட்வைஸ் பண்ற மாதிரி இருக்கும். ஆனா, தமிழ் சினிமா வசனம் என்பது மக்களின் எமோஷன்.
ஹிந்திப் பட வசனங்களை வைத்து சில பிராண்டுகளை உருவாக்குகிற மாதிரி, தமிழ் சினிமா வசனங்களை வைத்து, முதன் முதலாக ஒரு பிராண்டை ஆன்லைன் மூலமாக இவர்கள் உருவாக்க, அந்த இணைய பக்கத்திற்கு ‘கிரேஸி பஞ்ச்’ அப்படின்னு பெயரும் வைக்கிறாங்க.‘கிரேஸி பஞ்ச்’ அப்படிங்கறது ஒரு ட்ரெண்ட். இது கேட்க ரொம்ப நல்லா இருக்கு. ஆனா, பிசினஸ் வந்து எப்பவும் ஒரே மாதிரி இல்லாமல், ஏற்ற இறக்கங்களோடு தானே இருக்கும். புதுப்படம் வந்தா வியாபாரம் நடக்கும். இல்லன்னா நடக்காது என்பது மாதிரி.
இந்த நேரத்தில்தான் இருவருமாக கொரோனா லாக்டவுனை தொழிலில் சந்திக்கிறாங்க. இந்த இடைவெளி பல வருஷமாக அவர்கள் கனவு கண்ட ஒரு விஷயத்தை கையில் எடுக்கும் வாய்ப்பாகவும் அமைந்ததாக குறிப்பிடுகின்றனர் இருவரும். அதுதான் தூய தமிழ் வார்த்தைகளால் உருவான டீஷர்ட்ஸ். இதற்கு அவர்கள் வைத்த பெயர்
தான் ‘கல்வெட்டு.’சினிமா வசனம் அப்படிங்கறது ட்ரெண்டிங். ‘கிரேஸி பஞ்ச்’ என்பது ட்ரெண்டை துரத்துன ஒரு பிசினஸ் மாடல். அதை மக்கள் ஜாலியா வாங்கிடுவாங்க. ஆனா, ‘கல்வெட்டு’ அப்படிங்கறது ஒரு பாரம்பரியத்தை, அதாவது, ஒரு லெகசியை உருவாக்குகிற முயற்சி.
லெவிஸ், யுஎஸ்பி மாதிரியான சர்வதேச பிராண்டுகளுக்கு இணையாக ஜீன்ஸ், டீஷர்ட்ன்னு எல்லாத்துலையும் ஆ, க, ழ மாதிரியான வெறும் தமிழ் எழுத்துக்களை கொண்டு வர்றதுதான் இவங்களோட நோக்கமாகவும் இருந்திருக்கு. அதுவே இவர்களின் விஷனும்.லெவிஸ் லோகோ எப்படி ஒரு சட்டையோட ஓரத்துல ரொம்ப சின்னதா டீசன்ட்டா இருக்கோ அதே மாதிரி தமிழ் எழுத்துக்களை ரொம்ப மினிமலிஸ்டிக்கா ஒரு சின்ன எம்ப்ராய்டரி லோகோவா மாத்துகிற முயற்சியிலும் தற்போது இறங்கி இருக்கிறார்கள்.
அதாவது, தமிழை ஒரு வியாபார பொருளாய் மட்டும் பார்க்காமல், ஒரு இன்டர்நேஷனல் பிராண்ட் லோகோவை எப்படி நாம பெருமையாக அணிகிறோமோ, அதே பெருமையோடும்... அதே லெகஷியோடும் நம் தாய்மொழி எழுத்துக்களை அணிய வைக்கிறதுதான் கல்வெட்டு இணைய தளத்தின் வெற்றியாய் சொல்லப்படுகிறது.Facebookல் வலம் வருகிற 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் பெரும்பாலும் கோட்ஸ் அப்படின்னு சொல்லப்படுற நீண்ட வாசகங்கள் இருக்கின்ற ஆடைகளை அதிகமாக வாங்கி பயன்படுத்துறாங்க.
பிறருக்கு அட்வைஸ் பண்ற மாதிரியோ அல்லது கருத்து சொல்ற மாதிரியோ உடைகளை போடுவது அவர்களுக்குப் பிடிக்கிறது.ஆனால், GenZன்னு சொல்லப்படுகிற இன்றைய இளைஞர்கள் முகத்தில் அடிக்கிற மாதிரியான பெரிய எழுத்துக்களோ அல்லது நீளமான அட்வைஸ் வாசகங்களோ அணிய சுத்தமாக விரும்புவதே இல்லை. இவர்களுக்காகவே ஃபேஷன்
சீரீஸ் ஒன்றைத் தொடங்கி, கருப்பு நிற டீஷர்ட்டில் ரொம்ப சின்னதா ‘ழ’ மாதிரியான டிசைன்களை மட்டுமே வைத்து டீஷர்ட்ஸ் உருவாக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார்கள் இருவரும். இன்ஸ்டா பக்கத்தில் 25,000 ஃபாலோவர்ஸுடன் பெரிய ஹிட் அடிச்சிருக்கிறது இவர்களின் தயாரிப்பு.
நாம் அணிகிற ஆடைகளுக்கு பின்னால் இருக்கிற உளவியல் ஆழமானது. முந்தைய தலைமுறை வார்த்தைகள் மூலமாகத் தங்களை வெளிப்படுத்துனாங்க. ஆனால், இன்றைய தலைமுறைக்கு விஷுவல் அழகியலே அவர்களின் மொழி.
இந்த உளவியலை அருண் வெங்கடேஷ்- ஸம்ரிதி இணையர் எழுத்துக்களில் மட்டும் பயன்படுத்தல, ஆன்மீக ஆடைகளிலும் ரொம்ப அழகா பயன்படுத்தி இருக்காங்க.ஆம்! தமிழ் கடவுளான முருகனின் வேல் மாதிரியான சின்ன குறியீடுகளை மட்டும் எடுத்து, மாடர்ன் எலிமெண்ட்டாக அதனை டிசைன் செஞ்சிருக்காங்க. ஒரு காலேஜ் பையன் அந்த டீஷர்ட்ட போட்டுட்டு ஒரு மாலுக்கோ அல்லது ஒரு பப்புக்கோ கூட கேஷுவலாகப் போக முடியும். காரணம், அது அவனோட மாடர்ன் ஸ்டைலை துளியும் பாதிக்காத வகையில மிகச் சிறியதாய் இருக்கும்.
ஒரு கஸ்டமர் 100 முறை நம் பொருளை வாங்கினாலும் அதோட அளவும், தரமும் துளியும் மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தரமான நூலை இவர்களே வாங்கி, குவாலிட்டி செக்
செய்து, கரெக்டான ஜிஎஸ்எம்ல அதனை துணியாக்கி அவர்களது மேற்பார்வையிலேயே டை செய்து, பிளைன் டீஷர்ட்டுகளாக மாற்றுகிறார்கள்.தமிழ் சரியாக பேசத் தெரியாத, ஹிந்தி அப்புறம் பஞ்சாபிய தாய்மொழியாகக் கொண்ட, டெல்லியை சேர்ந்த ஒருவர் இன்று தூய தமிழை கொண்டாடுகிற ஒரு பிராண்டோட ஆணிவேராக, அதோட தரத்தை நிர்ணயிக்கிற ஒரு நபராக மாறியிருக்கிறார் என்பதுதான் இதில் சுவாரஸ்யமே.
ஆமாங்க... ஸம்ரிதி டெல்லி அருகே இருக்கிற பரிதாபாத் நகரைச் சேர்ந்தவராம். இவரும் பெங்களூரு நிஃப்டில் ஃபேஷன் டிசைனிங் படிப்பை முடித்து, மேக்ஸ் மற்றும் லைஃப் ஸ்டைல் மாதிரியான நிறுவனங்களில் ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.இந்த ஒட்டுமொத்த பிராண்டோட பின்னாடி இருக்கிற நம்பர்ஸ் கண்ட்ரோல், பிரின்டிங் பிளானிங், இன்வென்ட்ரி அத்தனையும் கண்ட்ரோல் பண்ற ஆப்ரேஷன்ஸ் பிரைன் ஸம்ரிதிதான்.
திறமைக்கும் தொழில் பக்திக்கும் மொழி ஒரு தடையே கிடையாது என்பதை நிரூபித்து, ரொம்பவே அழகாக நிர்வகித்து வருகிறார் இவர்.கிரியேட்டிவான கணவன் கச்சிதமான மேலாண்மை திறன் கொண்ட மனைவி என நிஜமாவே ஒரு பெர்பெக்ட் காம்பினேஷன் இந்த ஜோடி.மிகப்பெரிய சர்வதேச ஃபேஷன் பிராண்டுகளுக்கு இணையா மாத்த துடிக்கிற இவர்களின் பயணத்திற்கு வாழ்த்துச் சொல்லி விடைபெற்றோம்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்


