லடாக்: லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் இருந்து தனியே பிரிக்கப்பட்ட லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜன்ஸ்கார், திராஸ், ஷாம், நூப்ரா, சாங்தாங் ஆகிய புதிய மாவட்டங்களை உருவாக்கி ஒன்றிய உள்துறை உத்தரவிட்டது.