Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ.1,975 கோடி ஒதுக்கீடு: இணையம் சார்ந்த தொழிலாளர்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்

சென்னை: பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் திசையன்வினை, புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல், காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம், மயிலாடுதறை மாவட்டம் செம்பனார்கோவில், அரியலூா மாவட்டம் தா-பழுர், ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை, திருச்சி மாவட்டம் மணப்பாளை, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தென்காசி மாவட்டம் குறுக்கள்பட்டி மற்றம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய 10 இடங்களில் தலா 4 தொழிற்பிரிவுகள் கொண்ட புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மொத்தம் ரூ.152 கோடியில் துவங்கப்படும்.

கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் தொழிற்கல்வி பெற்றும் வகையில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், கோவை மாவட்டத்தில் பேரூர், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஆகிய கட்டுமான தொழிலாளர்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் விடுதி வசதிகளுடன் கூடிய 7 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தலா 6 தொழிற் பிரிவுகளுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிதியுதவியுடன் ரூ.148 கோடி செலவில் துவங்கப்படும்.

கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு தசைக்கூட்டு வலி பிரச்னை உள்ளிட்ட பணி சார்ந்த நோய்களை கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் 40 வயதிக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து மருத்துவ பரிசோதனை அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு 16.70 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர். தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டது. இந்த நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2000 இணையம் சார்ந்த சேவைப்பணி தொழிலாளர்களுக்கு புதிதாக இருசக்கர மின்வாகனம் வாங்கும் பொருட்டு தலா ரூ.20 ஆயிரம் மானியமாக வழங்கும் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.